ரயிலில் தன்மீது தூங்கி விழுந்த நபருக்கு குத்துவிட்ட சகபயணி: வைரல் வீடியோ
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரயில் பயணி ஒருவர் தன் மீது தூங்கி விழுந்த சக பயணியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூங்கி விழுந்த சக பயணிக்கு குத்து விட்ட நபர்
நியூயார்க் நகரின் ரயிலில் பயணம் செய்த சக பயணிகளுக்குள் ஏற்பட்ட தள்ளுமுள்ளு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், பயணி ஒருவர் தன் மீது தூங்கி விழுந்த சக பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், ஒருக்கட்டத்தில் கோபமடைந்து தன்மீது தூங்கி விழுந்த சக பயணிக்கு தன்னுடைய பின்னங்களையால் குத்து ஒன்றை விடுகிறார்.
New York man elbows another passenger on the subway #subwaycreatures #nyc #frailego pic.twitter.com/N6KX6ltBIz
— Rama (@EyesWitness00) August 24, 2023
இதில் தூங்கி விழுந்த நபர் சிறிது நேரம் சுயநினைவை இழந்து திரும்புகிறார். ஆனால் இதற்கு இடைப்பட்ட நேரத்திற்குள் பாதிக்கப்பட்ட நபரின் நண்பரும், தூங்கிய நபரை தாக்கியவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு ரயிலுக்குள்ளே சண்டையிட்டு கொள்கின்றனர்.
வெளியேறிய பயணிகள்
இதனால் பதட்டமடைந்த சக பயணிகள் அந்த பகுதியில் இருந்து வெளியேறி விலகி நின்றதுடன், ரயில் நிலையத்திற்கு வந்ததும் வெளியேறி செல்கின்றனர்.
இது தொடர்பாக பொலிஸார் வழங்கிய தகவலில், ரயிலுக்குள் சக பயணிகள் தாக்கி கொண்ட சம்பவம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை, அத்துடன் பாதிக்கப்பட்ட நபரும், அவரது நண்பரும் அடுத்த ரயில் நிலையத்திலேயே சக பயணிகளுடன் இறங்கி சென்றுவிட்டார்கள், முதலில் தாக்குதலில் ஈடுபட்ட நபர் தொடர்ந்து அதே ரயிலில் பயணம் செய்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் வடக்கு நோக்கிச் செல்லும் எஃப் ரயிலில் காலை 5.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது, மேலும் இந்த ரயில் ஹில்ஸ் 71 வது அவென்யூ நிறுத்தத்திற்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.