மனைவியை துண்டு துண்டாக வெட்டி 3 சூட்கேஸில் அடைத்த கணவன்: அதிர்ச்சியடைந்த பொலிஸார்
அமெரிக்காவில் மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சூட்கேஸில் அடைக்கப்பட்டு கிடந்த மனித உடல்
அமெரிக்காவின் டெல்ரே கடற்கரையில் பாம் டிரெயில் அருகே உள்ள கடலோர நீர்வழி பாதையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் கிடப்பதாக கடந்த மாதம் நபர் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார் சந்தேகத்திற்குரிய வகையில் கிடந்த 3 சூட்கேசை திறந்து பார்த்த போது, அதில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருந்த மனித உடலை கண்டுபிடித்தனர்.
William Lowe
அத்துடன் நூலில் கட்டப்பட்டு ஆண் ஒருவரின் பெல்ட்-ஆல் சுற்றப்பட்ட பை ஒன்றையும் பொலிஸார் மீட்டனர். அதில் துப்பாக்கியால் சுடப்பட்ட பெண் ஒருவரின் தலை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் 78 வயதுடைய வில்லியம் லோவ் என்பவரின் வீட்டை பொலிஸார் சோதனை செய்தனர்.
அப்போது அவரது வீட்டில் படுக்கையறை, ஹால், குளியறை முழுவதும் ரத்தக் கறை படிந்து இருப்பதையும், வீட்டில் இருந்த செயின்சா இரத்தக் கறையுடன் மனித எச்சங்கள் ஓட்டி இருப்பதையும் கண்டுபிடித்தனர்.
கணவர் கைது
இந்நிலையில் வில்லியம் லோவ் என்ற 78 வயதுடைய நபர் அவருடைய 80 வயதுடைய மனைவியை கொன்ற குற்றத்துக்காகவும், உடலை துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்காகவும் அவரை பொலிஸார் கைது செய்தனர்.
இதனிடையே உடல்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் தலையில் சுடப்பட்டு இறந்து இருப்பதாகவும், பின்னர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.