எளிய பயிற்சியின் மூலம் 124 கிலோ எடையை குறைத்த 36 வயது நபர்
அமெரிக்காவின் ஓஹியோவைச் சேர்ந்த ரியான் கிரூவெல் என்ற நபர் அளவுக்கு அதிகமான துரித உணவுகளை உட்கொண்டு, எந்த உடல் உழைப்பும் இல்லாததால், அவரது உடல் எடை 220 கிலோ அளவிற்கு அதிகரித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரியில், அதாவது தனது 34 வயதில் 220 கிலோ எடை இருந்த அவர், 23 மாதங்களில் 124 கிலோ எடையை குறைத்து, 96 கிலோவிற்கு மாறியுள்ளார்.
124 கிலோ எடை குறைப்பு
23 மாதங்களில் 220 கிலோவில் இருந்து எப்படி 96 கிலோவிற்கு தனது எடையை குறைத்தார் என்பது குறித்து reddit தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அளவிற்கு அதிகமான உடல் எடையால், குனிந்து ஷூ லேஷ் கட்டும்போது முச்சுத்திணறல் வரும் அளவிற்கு அவதிப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக உடல் எடையை குறைக்க முயன்ற அவர், நடைப்பயிற்சியை மேற்கொண்ட அவருக்கு மூட்டுவலி ஏற்பட்டுள்ளது.
அதன்பிறகு சைக்கிள் ஓட்ட முயற்சித்த அவர், ஆரம்பத்தில் அதிலும் மூட்டுவலி ஏற்பட்டதால் ஆரம்பத்தில் சில மைல்கள் மட்டும் சைக்கிள் ஓட்டியுள்ளார். இதில் மே மாதத்தில் அவரின் எடை 30 கிலோ குறைந்துள்ளது.
உடல் எடை சீராக குறைய தொடங்கியதால், உத்வேகத்துடன் 100 மைல்களுக்கு மேல் சைக்கிள் ஓட்ட தொடங்கியுள்ளார். இதன் மூலம், டிசம்பர் மாதத்திற்குள் 80 கிலோ எடையை குறைத்துள்ளார்.
மேலும், துரித உணவுகள், இனிப்புகள், மது ஆகியவற்றை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உண்ண தொடங்கியுள்ளார்.
2024 ஆம் ஆண்டில், உணவுக்கட்டுப்பாட்டுடன் 7500 மைல்கள் சைக்கிள் பயணம் செய்துள்ளார். இதன் விளைவாக 124 கிலோ எடையை குறைத்து, தற்போது 96 கிலோவிற்கு மாறியுள்ளார்.
சைக்கிள் ஓட்டுதல் கொழுப்பை எரிக்கவும் தசையை வளர்க்கவும் மட்டுமல்லாமல், தனது மன ஆரோக்கியத்தின் மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுக்கவும் உதவியதாக ரியான் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |