பிரம்மாண்ட பூசணி படகில் 73.5 கிமீ பயணம்! கொலம்பியா நதியில் சாதனை படைத்த அமெரிக்கர்
அமெரிக்காவில் 46 வயதுடைய நபர் ஒருவர் பூசணி படகில் 73.5 கிமீ பயணம் செய்து சாதனை படைத்துள்ளார்.
மிகப்பெரிய கனவு
அமெரிக்காவில் 46 வயதான பூசணி ஆர்வலர் கேரி கிறிஸ்டென்சன்(Gary Kristensen) என்ற நபர் கொலம்பியா நதியில் மிகப்பெரிய பூசணி படகில்(Pumpkin Boat) 73.5 கிமீ பயணம் செய்து தனது வாழ்நாள் கனவை நனவாக்கியுள்ளார்.
மேலும் இதன் மூலம் பூசணி படகில் மிக நீண்ட தூரம் பயணம் செய்த நபர் என்ற புதிய கின்ன்ஸ் உலக சாதனையையும் படைத்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு முதல் மாபெரும் பூசணிகளை வளர்த்து வரும் கிரிஸ்டென்சன், தனது திட்டத்திற்கு போதுமான அளவுக்கு ஒரு பூசணியை வளர்த்துள்ளார். "புங்கி லோஃப்ஸ்டர்”("Punky Loafster") என்று பெயரிடப்பட்ட இந்த மாபெரும் பூசணி 555 கிலோவுக்கும் அதிகமான எடையுடன் 14 அடி நீளம் கொண்டது.
ஆபத்தான பயணம்
கேரி கிறிஸ்டென்சன் பூசணி படகின் மீது நம்பிக்கை வைத்து கொலம்பியா நதியில் 73.5 கிமீ பயணம் செய்து இருந்தாலும், இந்த பயணம் அவ்வளவு எளிதான பயணமாக இருக்கவில்லை.
இந்த நதி பயணத்தின் போது கிறிஸ்டென்சன், வலுவான காற்று மற்றும் கொந்தளிப்பான நீரை எதிர்கொண்டார்.
அத்துடன் இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த, அவர் கயாக் மற்றும் படகுகளின் குழுவினருடன் தொடர்ந்து இணைப்பில் இருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |