இளம்பெண்ணை தொந்தரவு செய்த நபர்கள்: தட்டிக் கேட்ட அமெரிக்கருக்கு கத்திக் குத்து
ஜேர்மனியில், ஓடும் ரயிலில் இளம்பெண் ஒருவரை தொந்தரவு செய்த நபர்களைத் தட்டிக் கேட்ட அமெரிக்கருக்கு கத்திக் குத்து விழுந்தது.
அமெரிக்கருக்கு கத்திக் குத்து
ஜேர்மனியின் Dresden நகரில், ஓடும் ரயிலில் இளம்பெண் ஒருவரை தொந்தரவு செய்துள்ளார்கள் சிலர்.
அப்போது அதே ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்கரான ஜான் ருடாட் (John Rudat, 21) என்பவர் அந்தப் பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்தவர்களை தட்டிக் கேட்டுள்ளார்.
உடனே அவர்களில் ஒருவர் ஜானை கத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். ஜானுடைய முகத்தில் பல வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
கத்தியால் தாக்கியவரும் அவருடன் இருந்த ஒருவரும் தப்பியோட, அவர்களில் ஒருவரான 21 வயதுடைய சிரியா நாட்டவரான ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். மற்றவர் தப்பியோடிவிட்டார்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஜானுக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |