பள்ளி பேருந்தை திருடிய வாலிபர்: பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க இளைஞர் செய்த மோசமான செயல்
அமெரிக்காவில் பள்ளி பேருந்து ஒன்றை திருடிச் சென்ற வாலிபர் ஒருவரை பொலிஸார் துரத்தி பிடிக்க முயற்சித்த போது, அந்த வாலிபர் நிர்வாணமாக ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பள்ளி பேருந்தை திருடிய வாலிபர்
அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் பள்ளிப் பேருந்தை ஒன்றை திருடிக் கொண்டு செல்வதாக கரோல் டவுன்ஷிப் காவல் துறைக்கு அதிகாலை 7:10 மணிக்கு தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.
இதையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்ட பொலிஸார், பேருந்தை கண்டறியும் பணியில் தீவிரமாக இறங்கினார்கள்.
Getty
திருடப்பட்ட பேருந்து பென்சில்வேனியா பகுதியில் உள்ள டபிள்யூ. சிடன்ஸ்பர்க் சாலையில் செல்வதை கண்ட பொலிஸார் பேருந்தை நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.
ஆனால் பேருந்து நிற்காமல் சென்றதால், அதனை பொலிஸார் துரத்தி பிடிப்பதற்காக விரட்டினர், இறுதியில் பேருந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்து நின்றது.
நிர்வாணமாக ஓடிய இளைஞர்
பொலிஸார் சுற்றி வளைத்ததை அடுத்து பேருந்தை திருடிய வாலிபர் திடீரென பேருந்தில் இருந்து நிர்வாணமாக குதித்து தப்பியோட முயற்சித்தார்.
இளைஞரின் செயலை கண்ட முதலில் அதிர்ச்சி அடைந்த பொலிஸார், பிறகு அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞனின் பெயர் டோனி சாண்டர்ஸ்(24) என்று தெரியவந்தது.
Hulton Archive
மேலும், அவர் இறந்த மானை அவரது தோட்டத்தில் உரமாக பயன்படுத்துவதற்காக கொண்டு சென்றதாகவும், அதற்காகவே பள்ளிப் பேருந்தை திருடியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில் டோனி சாண்டர்ஸ் கைது செய்யப்பட்டு கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.