வங்கியை கொள்ளையடிக்க வந்தவரை கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்ன நபர்! அன்பின் தேவையை உணர்த்தும் சம்பவம்
அமெரிக்காவில் வங்கியில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையானை ஒருவர் கட்டிபிடித்ததால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கலிபோர்னியாவில் நடக்கவிருந்த ஒரு வங்கிக் கொள்ளை, ஒரு சாமானிய மனிதனின் அன்பால் நிறுத்தப்பட்டது என்பது ஆச்சரியத்திற்குரிய நிகழ்வாகும்.
அண்டை வீட்டார்
மைக்கேல் ஆர்மஸ் சீனியர் (Michael Armus Sr.) எனும் நபர் திங்களன்று Bank of the West-வங்கியில் ஒரு காசோலையை டெபாசிட் செய்து கொண்டிருந்தார்.
அப்போது ஒரு நபர் வங்கி உள்ளே நுழைந்தார். சட்டையால் தன் முகத்தை மறைத்திருந்த அந்த நபர், தன்னிடம் வெடிபொருட்கள் இருப்பதாகவும், வங்கியில் இருக்கும் பந்தத்தை தன்னிடம் கொடுக்கவேணும் என்றும் கோரிக்கை வைத்தார்.
Image Credit: ABC/ Woodland Police Department
அதிர்ஷ்டவசமாக, ஆர்மஸ் கொள்ளையனை முன்னாள் அண்டை வீட்டார் என அறிந்துகொண்டு, அவருடன் உரையாடலைத் தொடங்குவதன் மூலம் கொள்ளை நடவடிக்கையில் தலையிட முடிவு செய்தார்.
அரவணைத்து ஆறுதல் கூறினார்
தனது பாதுகாப்பு குறித்து பயப்படாமல், அந்த நபரை அணுகி, 'என்ன ஆச்சு?... உனக்கு வேலை இல்லையா?'' என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த கொள்ளைக்காரன், 'இந்த ஊரில் எனக்காக எதுவும் இல்லை. எனக்காக இந்த ஊரில் எதுவும் இல்லை. நான் சிறைக்கு செல்ல விரும்புகிறேன்’’ என்றார்.
ஆர்மஸ், அந்த நபரை வெளியில் செல்லும்படி சமாதானப்படுத்தி, அவரை அரவணைத்து ஆறுதல் கூறினார். அவர் கட்டிபிடித்ததும் அவன் அழத் தொடங்கினான். பின்னர் அங்கு பொலிசார் வந்தபிறகு அவனிடமிருந்து விலகிச் சென்றார்.
DK7C0H
இதனால் வங்கியில் கொள்ளையும் தடுக்கப்பட்டது, வேறு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.
எடுவார்டோ பிளாசென்சியா (42 வயது) என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், உட்லேண்ட் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கூறியது போல் அவரிடம் எந்த ஆயுதமும் வெடிபொருளும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
யாரிடமாவது அன்பாக இருக்க முயற்சி செய்யுங்கள்
இந்த சம்பவம் குறித்து பேசிய ஆர்மஸ், ''20, 25 ஆண்டுகளுக்கு முன்பு, நான் வாழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் அவர் வசித்து வந்தார். எனக்கு அவரைத் தெரியாது, ஆனால் நான் அவரைப் பலமுறை சுற்றுப்புறத்தில் பார்த்திருக்கிறேன். அவன் என் மகளின் நண்பன். அது தான் என் மனதை உடைத்தது. அங்கு நடந்த விதாயத்தில், நான் வேறு ஒன்றைப் பார்த்தேன். அவர் பேசும் விதத்தில் அவர் மன உளைச்சலில் இருப்பதாகத் தோன்றியது." என்று கூறினார்.
பிளாசென்சியா கைது செய்யப்பட்ட பிறகு, அர்மஸ் அவரை சிறையில் சந்திப்பது குறித்து பரிசீலிப்பதாக கூறினார்.
KCRA
"அன்பு எல்லாவற்றையும் வெல்லும். மக்கள் அதை உணரவில்லை. யாரிடமாவது அன்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். அது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும்" என்று ஆர்மஸ் கூறினார்.
இந்த சம்பவத்தில் பொலிஸார் அவரைப் பாராட்டினர் மற்றும் "ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய சரியான செய்தியை வழங்கிய நல்ல சாமானியன்" என்று அழைத்தனர்.