முன்னாள் மனைவிக்கு கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுத்த தோழிகள் மீது வழக்கு! 32 கோடி நஷ்ட ஈடு கேட்கும் நபர்
அமெரிக்காவில் முன்னாள் மனைவிக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்கி உதவியதற்காக, அவரது நண்பர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ள நபர், 1 மில்லியன் டொலர் (இலங்கை பணமதிப்பில் ரூ. 32 கோடி) நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.
முதல்முறையாக இப்படி ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கருவை கலைத்த முன்னாள் மனைவி
டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த மார்கஸ் சில்வா (Marcus Silva) எனும் நபர் தனது முன்னாள் மனைவிக்கு கருக்கலைப்பு மாத்திரைகளைப் பெற்றுக்கொடுக்க உதவியதாகக் கூறி மூன்று பெண்கள் மீது கொலைக்குற்றம் சாட்டியுள்ளார்.
டெக்சாஸின் தவறான மரணச் சட்டத்தின் கீழ் இதுபோன்ற முதல் வழக்கு இதுவாகும். அதுமட்டுமின்றி, அமெரிக்கா ரோ வி. வேட்டை வீழ்த்திய பிறகு இதுபோன்ற முதல் வழக்கு இதுவாகும். இந்த வழக்கு கருக்கலைப்பு எதிர்ப்பு மூலோபாயத்தில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கும் என்று வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது.
Getty
விவாகரத்து
மே 2022-ல் விவாகரத்து கோரி இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜூலை 2022-ல் தனது முன்னாள் மனைவி கர்ப்பமாக இருந்ததை அறிந்ததாக சில்வா குற்றம் சாட்டினார். விவாகரத்து பிப்ரவரி 2023-ல் இறுதி செய்யப்பட்டது.
ஆனால் அதுவரை தான் கர்ப்பமாக இருந்ததையும், கருவை கலைத்ததையும் விவாகரத்து செய்யும் கணவனிடம் கூறாமல் இருந்துள்ளார். விவாகரத்து பெற்ற பின்னர் சில்வாவிற்கு இந்த விடயங்கள் தெரிவந்துள்ளது.
சில்வா அதற்கு சாட்சியமாக முன்னாள் மனைவியின் குறுஞ்செய்திகளின் ஸ்க்ரீன்ஷாட்டுகளை சமர்ப்பித்தார்.
NYT
அதனை மேற்கோள்காட்டி, அவரது மனைவி பிரதிவாதிகளிடம் கூறுகையில், "எனக்கு எதிராக அவர் அதை பயன்படுத்துவார் என்று எனக்குத் தெரியும். நான் கர்ப்பமாக இருப்பதை முன்பு சொல்லியிருந்தால், அவர் அதையே ஒரு காரணமாக பயன்படுத்தி என்னுடன் இருக்க முயற்சி செய்திருப்பார்... என்று எனக்குத் தெரியும்." என்று கூறினார்.
தோழிகள் மீது வழக்கு
இந்நிலையில், சில்வா தனது முன்னாள் மனைவியின் இரண்டு நண்பர்கள் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகளை பெற்று கர்ப்பத்தை கலைத்ததாகவும், மற்றொரு பெண் மாத்திரைகளை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் 1 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பெண்களுக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை விநியோகிப்பதிலிருந்து தடை விதிக்க வேண்டும் என்று நீதிமனறத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
தற்போது, டெக்சாஸில், சில மருத்துவ அவசரநிலைகளைத் தவிர, கருக்கலைப்பு சட்டவிரோதமானது. கருக்கலைப்பு செய்பவர்கள் அல்லது யாருக்காவது கருக்கலைப்பு ஆபத்தை தேடுவோர் ஆயுள் வரை சிறைவாசம், அத்துடன் 100,000 டொலருக்கு குறையாத அபராதம் விதிக்கப்படும்.