ஆணுறையில் சுற்றப்பட்ட வாழைப்பழத்தை விழுங்கிய நபர்! காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்
அமெரிக்காவில் 34 வயது நபர் ஒருவர் உணர்வின் உச்சத்தில் ஆணுறையில் சுற்றப்பட்ட வாழைப்பழத்தை முழுவதுமாக விழுங்கியதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆணுறை விழுங்கிய நபர்
அமெரிக்காவில் 34வயது நபர் ஒருவர் ஹார்மோன் உணர்ச்சிகளின் உச்சத்தில், ஆணுறையில் சுற்றப்பட்ட வாழைப்பழத்தை முழுவதுமாக விழுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆணுறையில் போதைப்பொருள் நிரப்பப்பட்ட வழக்குகள் பற்றிய பல அறிக்கைகள் வரலாற்றில் ஏற்கனவே இருக்கும் நிலையில், வாழைப்பழம் சுற்றப்பட்ட ஆணுறையில் விழுங்கப்பட்ட முதல் வழக்கு இது என Cureus இதழில் வெளியிடப்பட்ட செய்தியில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
Jam Press
பெயர் வெளியிடப்படாத நபர் வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தியால் அவதிப்பட்ட ஏழு மணி நேரத்திற்கு பிறகு உள்ளூர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாப்பிட, குடிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்த அவர், முந்தைய நாளிலிருந்து கழிப்பறைக்கு கூட செல்லவில்லை என தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சை
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரை மருத்துவர்கள் CT ஸ்கேன் செய்து பார்த்த போது, அந்த நபரின் சிறுகுடலை தடுக்கும் வகையில் ஆணுறை சுற்றப்பட்ட வாழைப்பழம் இருப்பதை கண்டறிந்தனர்.
அப்போது சம்பந்தப்பட்ட நபர், 24 மணி நேரத்திற்கு முன்பு “ஹார்மோன் ஆத்திரத்தின் உச்சத்தில்” ஆணுறை சுற்றப்பட்ட வாழைப்பழத்தை விழுங்கியதை ஒப்புக்கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Jam Press
அத்துடன் பாதிக்கப்பட்ட நபருக்கு மனச்சோர்வு வரலாறு இருப்பதாகவும், ஆனால் சுய தீங்கு செய்யும் நோக்கமோ அல்லது இதற்கு முன்னதாக இதுபோன்ற விழுங்கல் செயலை செய்து இல்லை என அவர் மறுத்ததாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அவர் இந்த செயலின் போது போதைப்பொருள் அல்லது மதுபானம் அருந்தி இருக்கவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார். இறுதியில் சிறு குடலில் இருந்து வாழைப்பழம் நிரப்பப்பட்ட ஆணுறை அறுவை சிகிச்சை நிபுணர்களால் அகற்றப்பட்டது.
ஆணுறை அகற்றப்பட்ட அகற்றப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதுடன் அவர் தற்போது எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.