லொட்டரியில் சிறிய பரிசை வாங்கிச்செல்ல வந்தவருக்கு காத்திருந்த இன்பச்செய்தி., உண்மையில் வென்ற தொகை எவ்வளவு தெரியுமா?
அமெரிக்காவின் வர்ஜீனியாவைச் சேர்ந்த ஒருவர் லொட்டரியில் தனக்கு விழுந்ததாக அணிவித்த 600 டொலர் பரிசை வாங்க சென்றுள்ளார்.
ஆனால், லோட்டரி வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர்கள் அவர் உண்மையில் வென்ற பரிசுத்தொகையை கூறியதைக் கேட்டு அதிர்ச்சியுற்றார்.
வர்ஜீனியாவைச் சேர்ந்த ஒருவர், லொட்டரியில் தனக்கு வெறும் $600 (இலங்கை ரூ. 2.14 லட்சம்) பரிசு விஹஸுந்த்தாக நினைத்து அதனை வாங்கிக்கொள்ள சென்றபோது பெரும் ஆச்சரியத்தை சந்தித்தார்.
ஏனெனில், அவர் உண்மையில் $1 மில்லியனை (இலங்கை ரூ. 35.7 கோடி) வென்றுள்ளார் என்று லொட்டரி ஊழியர்கள் கூறியுள்ளனர்.
வர்ஜீனியா லொட்டரி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, Jose Flores Velasquez என்ற அந்த இளைஞர் வேலைக்குப் பிறகு, Annadale-ல் உள்ள ஒரு மளிகைக் கடையில் இருந்து 20X the Money scratch-off லொட்டரி சீட்டை வாங்கினார்.
VirginiaLottery
Jose லொட்டரி நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு வந்தபோது, அவர் எதிர்பார்த்ததை விட பரிசுத்தொகையின் மதிப்பு அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசாக விழுந்துள்ளதாகவும், அதனை 30 ஆண்டுகளில் முழுமையாக 1 மில்லியன் பரிசையும் வாங்கிக்கொள்ளலாம் அல்லது ஒரே தொகையாக வரி பிடிப்பிற்கு முன் 759,878 அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூ. 27 கோடி) ரொக்கமாகப் பெறலாம் என்று லாட்டரி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் எந்த விருப்பத்தை தேர்ந்தெடுத்தார் எனது தெரிவிக்கப்படவில்லை. அவர் தனது பரிசு அட்டையின் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வர்ஜீனியா லொட்டரி நிறுவனம் வெளியிட்டுள்ளது.