கோடிக்கணக்கான பணத்தை சாலையில் அள்ளி இறைத்த நபர்! அமெரிக்காவில் வினோத சம்பவம்
அமெரிக்காவில் மக்களை ஆசிர்வதிப்பதாக கூறி, கோடிக்கணக்கான பணத்தை ஓடும் காரிலிருந்து நபர் ஒருவர் ஜன்னலுக்கு வெளியே அள்ளி இறைத்த சம்பவம் அவரது குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் கோடிக்கணக்கில் பணத்தை வீசிய நபர்
Colin Davis McCarthy எனும் 38 வயதான அந்த நபர், செவ்வாயன்று இரவு சுமார் 7:23 மணிக்கு, ஒரேகான் மாகாணத்தில் Eugene அருகே இன்டர்ஸ்டேட் 5-ல் மைல்போஸ்ட் 192-க்கு சாலையில், தனது காரில் இருந்து பணத்தை அள்ளி இறைத்தார்.
சாலையில் சென்ற மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி அதனை எடுத்துச் சென்றனர். அவர் அந்த பணத்துடன் மக்களை ஆசிர்வதிப்பதாக கூறி அள்ளி எறிந்துள்ளார்.
ஆவர் சாலையில் வீசிய தொகை எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட 200,000 டொலர், அதாவது இலங்கை பண மதிப்பில் ரூபா. 6.46 கோடியாகும். எல்லாம் 100 டொலர் பணத்தாள்கள் என கூறப்படுகிறது.
Fox19
குடும்பத்தினர் சோகம்
ஆனால், இந்த சம்பவம் McCarthy-யின் குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் அளித்துள்ளது. ஏனெனில், அவர் தனது குடும்பத்தின் கூட்டு வங்கிக் கணக்கிலிருந்து மொத்த பணத்தையும் எடுத்துதான் இவ்வாறு வாரி இறைத்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்து விசாரித்துள்ளனர். அப்போது, கொலின் டேவிஸ் தான் நன்றாக இருப்பதாகவும், பணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
Fox19