தெரியாமல் நுழைந்த லொட்டரியில் ரூ.3.5 கோடி வென்ற நபர்! தேடிவந்த அதிர்ஷ்டம்
அமெரிக்காவில் தெரியாமல் நுழைந்த லொட்டரி விளையாட்டில் ஒருவர் 100,000 அமெரிக்க டொலர் வென்றுள்ளார்.
தற்செயலாக மின்னஞ்சலை பார்த்தபோது பரிசு விழுந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள நபர் ஒருவர், Michigan Lottery-ன் 300 மில்லியன் டொலர் டைமண்ட் ரிச்சஸ் செகண்ட் சான்ஸ் கேமில் தெரியாமல் நுழைந்து $100,000 (இலங்கை பண மதிப்பில் ரூ. 3.53 கோடி) மதிப்புள்ள லொட்டரி ஜாக்பாட்டை வென்றுள்ளார்.
58 வயதான அந்த அதிர்ஷ்டசாலி நபர் ஆகஸ்ட் 17 அன்று பரிசை வென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிச்சிகன் லொட்டரி செயலியைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் அவர் தற்செயலாக விளையாட்டில் நுழைந்தார் என்று லொட்டரியின் வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கோரிக்கையின் பேரில் அந்த நபரின் அடையாளம் வெளியிடப்படவில்லை.
வெற்றிபெற்றவர், "நான் $300,000,000 டயமண்ட் ரிச்சஸ் டிக்கெட்டுகளில் சிலவற்றை வாங்கினேன், அவற்றை லாட்டரி பயன்பாட்டில் ஸ்கேன் செய்து அவற்றை இருமுறை சரிபார்த்த பிறகு அவற்றை ஸ்கேன் செய்தேன்.
டிக்கெட்டின் பின்புறத்தை நான் ஒருபோதும் படிக்கவில்லை, எனவே அவற்றை ஸ்கேன் செய்வதன் மூலம், ஒரு கிவ்அவேயில் உள்ளீடுகளைப் பெற்றேன் என்பது எனக்குத் தெரியாது" என்று அவர் கூறினார்.
தற்செயலாக ஒருநாள் தனக்கு $300,000,000 Diamond Riches-ன் second chance drawing-ல் என மின்னஞ்சல் வந்திருப்பதை பார்த்தது இன்ப அதிர்ச்ச அடைந்ததாக அவர் கூறினார்.
பரிசைப் பெறுவதற்காக லொட்டரி தலைமையகத்திற்குச் சென்ற அவர், வென்ற பணத்தில் தனது குடும்பத்திற்கு உதவியாக பயன்படுத்தவுள்ளதாக கூறியுள்ளார்.