பிறந்தநாள் எண் மூலம் ரூ.9.5 கோடி லொட்டரி வென்ற நபர்
தனது பிறந்தநாள் எண் கொண்ட லொட்டரியை வாங்கிய நபர் ரூ.9.5 கோடி பரிசு வென்றுள்ளார்.
பிறந்தநாள் எண் மூலம் ரூ.9.5 கோடி லொட்டரி
அமெரிக்காவின் வட கரோலினா கல்வி லொட்டரி, புதிதாக டிரிபிள் ரெட் 777 ஜாக்பாட் என்ற லொட்டரியை தொடங்கியுள்ளது.

மாண்ட்கோமெரி கவுன்டியில் உள்ள பிஸ்கோவைச் சேர்ந்த தோமஸ் முனோஸ் என்பவர், கேண்டரில் உள்ள சவுத் மெயின் தெருவில் இருக்கும் கேண்டர் வி மார்ட் கடையில் 10 டொலர் மதிப்புள்ள 'டிரிபிள் ரெட் 777 ஜாக்பாட்' டிக்கெட்டை பார்த்துள்ளார்.
அவரின் பிறந்த ஆண்டு 1977 மற்றும் பிறந்தநாள் 7 ஆம் திகதி என்பதால் அதனை தனது வாழ்வின் அதிர்ஷ்டமான எண்ணாக கருதி வந்துள்ளார். அதனால் இந்த டிரிபிள் ரெட் 777 ஜாக்பாட்டை கண்டதும் அதனை உடனே வாங்கியுள்ளார்.
அந்த கடையில் வைத்தே லொட்டரி டிக்கெட்டை சுரண்டிய அவர், 1 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.9.5 கோடி) முதல் பரிசு வென்றதை நினைத்து சந்தோஷத்தில் குதித்துள்ளார்.
அதன் பின்னர் முனோஸ் லொட்டரி தலைமையகத்திற்கு சென்ற அவருக்கு பெறுவதற்கு 2 வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
பரிசை 20 ஆண்டுகளுக்கு 50,000 டொலர் தவணையாகவோ அல்லது டொலர் 600,000 மொத்தத் தொகையாகவோ பெறலாம். அவர் 600,000 டொலர் மொத்தத் தொகையைத் தேர்ந்தெடுத்து, வரிப் பிடித்தங்களுக்குப் பிறகு, 396,060 டொலரை பெற்றார்.
பரிசுப் பணம் குறித்த தனது திட்டங்களைப் பற்றிப் பேசிய முனோஸ், பணத்தின் ஒரு பகுதியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், தனக்குத் தனிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தோன்றும் பழங்காலக் கார்களைப் புதுப்பிக்க தொடர்ந்து நிதியளிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
1 மில்லியன் டொலர் மதிப்புள்ள மூன்று முதல் பரிசுகளுடன் அறிமுகமான டிரிபிள் ரெட் 777 ஜாக்பாட் விளையாட்டில் இன்னும் 2 பரிசுகள் வெல்லப்படாமல் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |