ஒரே ஒரு கனவால் மாறிய வாழ்க்கை: $1,000,000 பரிசு வென்ற அதிசயம்
கனவை நம்பி லொட்டரி வாங்கிய நபர், மில்லியன் டொலர் பரிசு வென்றுள்ளார்.
அமெரிக்காவின் வட கரோலினாவைச் சேர்ந்த ரிக்கி நன்னெரி ஜூனியர்(Ricky Nunnery Jr), சான்ஃபோர்டில் வசித்து வருகிறார்.
லொட்டேரி கனவு
இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை லொட்டரியில் பரிசு ஜெயிப்பது போன்ற கனவு வந்துள்ளது. உடனடியாக லொட்டரி வாங்குமாறு அவரது உள்ளுணர்வு கூறியுள்ளது.
இதனையடுத்து, டீப் ரிவர் சாலையில் உள்ள விங்க் மார்ட்டிற்கு சென்ற அவர், அங்கு 10 டொலர் லொட்டரியை வாங்கியுள்ளார். இதில், அவருக்கு 1 மில்லியன் டொலர் பரிசு கிடைத்துள்ளது.
இந்த பரிசை, அவர் 20 ஆண்டுகளுக்கு ஆண்டுத் தொகையாக 50,000(இந்திய மதிப்பில் ரூ.43 லட்சம்) டொலராக பெற உள்ளாரா அல்லது மொத்தமாக 6,00,000 டொலராக(இந்திய மதிப்பில் ரூ.5.17 கோடி) பெற உள்ளாரா என கேட்கப்பட்டது.
இதை அவர் மொத்தமாக 6,00,000 டொலராக பெற முடிவு செய்து, தேவையான மாநில மற்றும் மத்திய வரி பிடித்தங்களுக்குப் பிறகு, 430,503 டொலர்(இந்திய மதிப்பில் ரூ3.71 கோடி) தொகையை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.
இது குறித்து பேசிய அவர், "இன்று கனவு வந்த பிறகு, லொட்டரி வாங்க வேண்டும் என்று உள்ளுணர்வு சொன்னது. இதனையடுத்து லொட்டேரி வாங்கியதில் வெற்றி பெற்று உள்ளேன். இந்த பணத்தை எனது அன்றாட தேவைக்கும், முதலீடு செய்யவும் பயன்படுத்த உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |