கலிபோர்னியா ஈரானின் புதிய பகுதி: ஹார்முஸ் விவகாரத்தில் டிரம்புக்கு பதிலடி
Iran us map row: depicting California as iran territory: கலிபோர்னியாவை ஈரானின் ஒரு பகுதியாக அறிவித்து அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
ஹார்முஸ் விவகாரம்
உலகளாவிய வர்த்தக கப்பல்களின் கடல் வழித்தடமாக ஹார்முஸ் திகழ்ந்து வரும் நிலையில், ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்ட மோதல் போக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையில் சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட வரைபடம் ஒன்றில், ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டு இருந்தது.

இந்த படத்தை பின்னர் வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ கணக்கும் மறு பதிவு செய்து இருந்தது.
ஈரான் கொடுத்த பதிலடி
இந்நிலையில் டிரம்பின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவின் முக்கியமான மாகாணங்களில் ஒன்றான கலிபோர்னியாவை ஈரானின் ஒரு பகுதியாக சித்தரித்து ஈரான் வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள ஈரானிய தூதரகம் இந்த வரைபடத்தை தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதில், நீல நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள கலிபோர்னியா பகுதி “இஸ்லாமிய குடியரசின் புதிய பிராந்திய பகுதி என குறிக்கப்பட்டிருந்தது.
உலக அளவில் ஈரானிய புலம்பெயர்ந்தவர்கள் அதிகமாக வாழும் இடமாக அமெரிக்காவின் கலிபோர்னியா திகழ்கிறது.
லாஸ் ஏஞ்சல்ஸின் வெஸ்ட்வுட் பகுதி “தெஹ்ரான்கலெஸ்” என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |