US Midterm Elections 2026: டிரம்பின் கட்சிக்கு பின்னடைவு
அமெரிக்க இடைக்கால தேர்தலில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக்கட்சி பெரும் பின்னடையை சந்தித்துள்ளது.
அமெரிக்காவின் கீழ்சபை 435 இடங்களை கொண்டது, இதில் பெரும்பான்மை பெற குறைந்தது 218 இடங்களை பிடிக்க வேண்டும். மேல்சபை 100 இடங்களை கொண்டது, இதில் பெரும்பான்மை பெற 50 இடங்கள் தேவை.
கீழ்சபையில் உள்ள 435 இடங்களுக்கும், 35 செனட் சபை இடங்களுக்கும் பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்கள், உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்குபதிவு நேற்று நடைபெற்றது.
இன்று காலை முதல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் டிரம்பின் குடியரசுக்கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
ஆட்சிக்கு வந்த பின்னர் டிரம்பின் செயல்பாடுகளே மக்களின் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம். சட்டத்திற்கு புறம்பாக குடியேறியுள்ள மக்களை வெளியேற்றுவது, அதிகப்படியான வரி விதிப்பு, இஸ்ரேலுக்கு ஆதரவாக போரில் களமிறங்கியது என பல காரணங்கள் இருக்கலாம்.
எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வெற்றி பெற்று இரு அவைகளையும் கைப்பற்றினால் டிரம்பின் எஞ்சிய 2 ஆண்டு கால பதவிகாலத்தில் நிர்வாக முடிவுகளை எடுப்பதில் சிக்கல்களை சந்திக்கலாம் என கூறப்படுகிறது.
டிரம்பின் பதிவு
இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் டிரம்ப், நான் வாக்குச்சீட்டில் இடம்பெறவில்லை; ஒருவேளை நான் இடம்பெற்றிருந்தால், நாங்கள் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்போம்! என பதிவிட்டுள்ளார்.
