நடுக்கடலில் அழிக்கப்பட்ட போதைப்பொருள் நீர்மூழ்கி கப்பல்: வெளியான வீடியோ ஆதாரம்
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நீர்மூழ்கி கப்பலை அமெரிக்க ராணுவம் அழித்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் நீர்மூழ்கி கப்பல் அழிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு, கரீபியன் கடலில் பயணித்த போதைப்பொருள் நீர்மூழ்கி கப்பலை அமெரிக்கா வெற்றிகரமாக அழித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
📹 DESTROYED: Confirmed DRUG-CARRYING SUBMARINE navigating towards the United States on a well-known narcotrafficking transit route.
— The White House (@WhiteHouse) October 18, 2025
"Under my watch, the United States of America will not tolerate narcoterrorists trafficking illegal drugs, by land or by sea." - President Trump pic.twitter.com/N4TAkgPHXN
அமெரிக்காவை நோக்கி போதைப்பொருள் கடத்தி செல்வதற்காக பயன்படுத்தப்படும் நன்கு அறியப்பட்ட பாதையில் இந்த தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.
இதில் 2 பேர் கொல்லப்பட்ட நிலையில், 2 பேர் உயிர் பிழைத்துள்ளனர்.
திருப்பி அனுப்பப்பட்ட இருவர்
அமெரிக்க ஜனாதிபதியால் பயங்கரவாதிகள் என குறிப்பிடப்பட்ட உயிர் பிழைத்த இருவரும் விசாரணை மற்றும் தண்டனைக்காக அவர்களுடைய சொந்த நாடான கொலம்பியா மற்றும் ஈக்வடார் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கொலம்பியாவை சேர்ந்த நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டதை கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் போதைப்பொருள்களை தடுப்பதற்காக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்த அமெரிக்க ராணுவத்தின் சமீபத்திய நடவடிக்கை இதுவாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |