போதைப்பொருள் கடத்தல் படகை குறி வைத்து வீழ்த்திய அமெரிக்கா: 4 பேர் பலி
போதைப்பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ராணுவம் அதிரடி
புதன்கிழமை கிழக்கு பசிபிக் கடல் பிராந்தியத்தில் சட்டவிரோதமாக சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகை குறிவைத்து அமெரிக்க ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
சந்தேகத்திற்குரிய படகு மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் நான்கு பேர் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த தாக்குதலானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச கடல் வழி பாதை வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் இந்த தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளவுத் துறையின் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலின் பிறகே இந்த தாக்குதலானது மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் விளக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |