அமெரிக்கா ஜப்பானுடன் இணைந்த தென் கொரியா... கடும் கோபத்தில் எச்சரித்த வடகொரியா
அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் இணைந்து நடத்திய கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வடகொரியா எச்சரிக்கை
மட்டுமின்றி, நாட்டைக்காக்க தேவைப்பட்டால் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. Freedom Edge என பெயரிடப்பட்டு கடந்த வாரம் மூன்று நாடுகளும் மூன்று நாள் கூட்டுப் பயிற்சியை நடத்தியது.
இதில், போர் விமானங்கள், கடல் ரோந்து விமானங்கள் மற்றும் அமெரிக்க அணுசக்தியில் இயங்கும் விமானம் தாங்கி கப்பலான USS ஜார்ஜ் வாஷிங்டன் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன.
உடனடி நடவடிக்கை
இந்த நிலையிலேயே அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது வடகொரியா. மேலும், கொரிய தீபகற்பத்தில் இராணுவ மோதலை உண்டாக்கக்கூடிய, ஆத்திரமூட்டல் மற்றும் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தும் விரோத செயல்களை உடனடியாக நிறுத்துங்கள் என்றும் எச்சரித்துள்ளது.
வடகொரிய இராணுவம் அனைத்து வாய்ப்புகளையும் ஆய்வுக்கு உட்படுத்தும் என்றும் ஆபத்தை முன்கூட்டியே கட்டுப்படுத்த தேவைப்பட்டால் உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |