இளம்பெண்ணை கடத்தி வைத்து கத்தியால் கையில் ’6’ என்ற எண்ணை எழுதிய கோடீஸ்வரர்! அம்பலமான பகீர் சம்பவம்
அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் இளம்பெண்ணை கடத்தி வீட்டில் அடைத்து வைத்து கொடூரமாக துன்புறுத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Salt Lake City-ஐ சேர்ந்தவர் Ramone Marcio Martinez (39). இவரை பொலிசார் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்தனர். அப்போது தான் கோடீஸ்வரன் எனவும் தனக்கு கலிபோர்னியா, அரிசோனா, ஒரிகனில் தொழில்கள் உள்ளதாக Ramone தெரிவித்துள்ளார்.
இவர் இளம்பெண்ணொருவரை கடத்தி கொண்டு சென்று தனது வீட்டில் பல வாரங்களுக்கு சிறை வைத்துள்ளார். அந்த சமயத்தில் தொடர்ச்சியாக அப்பெண்ணை தாக்கியதோடு, அவர் கையில் கத்தியை கொண்டு 6 என்ற எண்ணை எழுதியுள்ளார்.
அதாவது 6 மாதத்திற்குள் தன்னை காதலிக்க வேண்டும் அல்லது கொல்லப்படுவாய் என்பதே அர்த்தமாகும். இந்த சூழலில் பாதிக்கப்பட்ட பெண் ஒரு கட்டத்தில் தனது நண்பருக்கு தனது நிலை குறித்து மெசேஜ் அனுப்பியுள்ளார், இதை தொடர்ந்தே பொலிசாருக்கு தகவல் சென்றது.
பின்னர் Ramone வீட்டுக்கு வந்த பொலிசார் அப்பெண்ணை மீட்டு அவரை கைது செய்தனர். அப்போது அப்பெண் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டார், மேலும் உடல் முழுவதும் காயங்கள் மற்றும் விலாவில் ஏற்பட்ட வலியால் துடித்தார்.
இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கைதான Ramone ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாலும், அதிக அளவில் பணம் பதுக்கி வைத்திருப்பதாலும் ஜாமீன் இல்லாமல் அவர் காவலில் தொடர்ந்து இருக்க வேண்டும் என பொலிசார் பரிந்துரைத்துள்ளனர்.