அமெரிக்காவில் பள்ளியை குறிவைத்து துப்பாக்கி தாக்குதல்: 8,10 வயதுடைய இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு!
அமெரிக்காவின் மினியாபிலிஸில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு
அமெரிக்காவின் மினியாபிலிஸில்(Minneapolis) உள்ள அன்னவுன்சியேஷன் கத்தோலிக்க பள்ளியில் (Annunciation Catholic School) காலை நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 8 மற்றும் 10 வயதுடைய இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
காலையில் நடைபெற்ற திருப்பலியின் போது இந்த தாக்குதல் நடைபெற்றதால், இது வழிபாட்டாளர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட திட்டமிட்ட வன்முறை என பொலிஸ் அதிகாரி பிரையன் ஓ ஹாரா தெரிவித்துள்ளார்.
தேவாலயத்தின் ஜன்னல் வழியாக தாக்குதல்தாரி இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார், அத்துடன் அவரது கையில் ரைபிள், ஷாட்கன் மற்றும் பிஸ்டல் ஆயுதங்களை கையில் வைத்திருந்துள்ளார்.
மேலும் தாக்குதலுக்கு பிறகு, தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தாக்குதல்தாரி உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த சம்பவத்தில் 17 பேர் வரை காயமடைந்த நிலையில், அதில் 14 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் தற்போது உள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக ஊடக பக்கமான ட்ரூத் சோஷியல் இது தொடர்பாக தெரிவித்த கருத்தில், இந்த பயங்கரமான நிலைமையை அமெரிக்க அரசு கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |