எனக்கு நல்ல கணவன் வேண்டும்! சாலையில் அமெரிக்க மாடல் அழகி செய்த தரமான செயல்
அமெரிக்காவில் தனக்கு கணவன் வேண்டும் என்று இளம் மாடல் அழகி ஒருவர் சாலையில் பதாகையுடன் நின்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பதாகையுடன் சாலையில் நின்ற மாடல் அழகி
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியை சேர்ந்த கரோலினா கீட்ஸ்(29) என்ற மாடலிங் அழகி தனக்கான துணைவரை இரண்டு ஆண்டுகளாக தேடி வருகிறார்.
10க்கும் மேற்பட்ட மாடலிங் இதழ்களின் அட்டை படங்களில் வந்துள்ள கரோலினா கீட்ஸ், தனக்கான துணைவரை தேடி பல டேட்டிங் ஆப்களை முயற்சித்து பார்த்துள்ளார்.
ஆனால் அந்த வழிமுறை தனக்கு உதவாது என்பதை அறிந்து தற்போது நூதன முறையில் தனக்கான துணைவரை தேர்ந்தெடுக்க முயற்சித்து வருகிறார்.
இதற்காக தினமும் அமெரிக்காவின் முக்கிய சாலையில் “தனக்கான கணவனை தேடி வருகிறேன்” என்று எழுதப்பட்ட பதாகையுடன் நின்று வருகிறார்.
பிரித்தானியாவில் 70 வயது மூதாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்: 30 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் பெறவுள்ள லொட்டரி பரிசு
முயற்சியை கைவிடப்போவது இல்லை
சமீபத்தில் ஆண் ஒருவரிடம் பேசி தனது செல்போன் எண்களை பகிர்ந்து கொண்ட கரோலினா தனக்கான வரை கண்டுபிடித்து விட்டேன் என்று நினைக்கிறேன், இருவரும் பேசி வருகிறோம் என தெரிவித்து இருந்தார்.
ஆனால் அந்த நபர் தனக்கு சரியானவர் அல்ல என்பதை அறிந்து கொண்டேன் என தெரிவித்து, மீண்டும் சாலையில் பதாகையுடன் நிற்க தொடங்கியுள்ளார்.
இந்த வழிமுறை மூலம் தனக்கு நல்ல துணைவர் ஒருவர் நிச்சயமாக கிடைப்பார் என நம்புவதாகவும், தனது முயற்சியை அதுவரை கைவிடப்போவது இல்லை என்றும் கரோலினா கீட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கணவரை தேடி சாலைக்கு வந்த மாடல் அழகியின் வீடியோ சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |