புடினுக்கு எச்சரிக்கை... அணு ஆயுதங்களை பிரித்தானியாவிற்கு நகர்த்தும் அமெரிக்கா
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை எச்சரிக்கும் வகையில், 2008 க்குப் பிறகு முதல் முறையாக அமெரிக்கா அணு ஆயுதங்களை பிரித்தானியாவில் நிலைநிறுத்த முடிவு செய்துள்ளது.
அணு ஆயுதங்களின் நிலை
நியூ மெக்ஸிகோவின் அல்புகெர்க்கியில் உள்ள கிர்ட்லேண்ட் விமானப்படை தளத்தில் உள்ள அமெரிக்க அணு ஆயுதக் கிடங்கிலிருந்து அமெரிக்க இராணுவ விமானம் ஒன்று அதன் டிரான்ஸ்பாண்டரை இயக்கியபடி பறந்தது.
பொதுவாக அமெரிக்க மற்றும் பிரித்தானியா அரசாங்கங்கள் தங்கள் அணு ஆயுதங்களின் நிலை அல்லது இருப்பிடம் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை என்ற நீண்டகால கொள்கைகளைக் கொண்டுள்ளன.
ஆனால் ஜூலை 16ம் திகதி பிரித்தானிய நகரமான லேகன்ஹீத்தில் உள்ள விமானப்படை தளத்தில் தரையிறங்கிய அமெரிக்க விமானமானது அதன் அடையாளத்தையும் இருப்பிடத்தையும் பொதுவில் காணும்படி செய்துள்ளது.
C-17 விமானமானது அமெரிக்க விமானப்படையின் அணு ஆயுதங்களை நகர்த்தும் படையை சேர்ந்தது. இந்த விமானம் அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் ஆனால், வேறு எந்த நாட்டின் பிரதேசத்தின் மீதும் பறப்பதில்லை.
திறனைக் குறைக்கவில்லை
C-17 விமானத்தில் பெரும்பாலும் புதிய B61-12 வெப்ப அணு குண்டுகள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்றே கூறப்படுகிறது. மேலும், பனிப்போருக்குப் பிறகு முதல் முறையாக ஐரோப்பாவில் அமெரிக்க அணு ஆயுதங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
மட்டுமின்றி, ஐரோப்பாவில் தனது அணுசக்தி திறனைக் குறைக்கவில்லை என்பதை ரஷ்யாவிற்குக் காட்ட அமெரிக்கா விரும்புகிறது என்றும் கூறுகின்றனர். இந்த விடயத்தில் நேட்டோ அதிகாரிகள் உடனடியாகக் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
B61-12 அணு குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட குறைந்தது ஒரு டசின் புதிய அமெரிக்க தயாரிப்பு F-35A போர் விமானங்களை வாங்குவதாக பிரித்தானியா கடந்த மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |