நடுவானில் மாயமான அமெரிக்க ஹெலிகாப்டர்..! என்ன ஆனது... இராணுவம் வெளியிட்ட முக்கிய தகவல்
அமெரிக்க விமான தாங்கி கப்பலில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து U.S pacific Fleet அளித்த தகவலின் படி, அமெரிக்க விமான தாங்கி கப்பலான ஆபிரகாம் லிங்கன் (சிவிஎன் 72)-ல் இருந்து புறப்பட்ட கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
சான் டியாகோ கடற்கரையில் இருந்து சுமார் 60 கடல் மைல் தூரத்தில் மாலை 4:30 மணிக்கு வழக்கமான நடவடிக்கையின் போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
பல கடலோர காவல்படை மற்றும் கடற்படையின் வானுர்தி மற்றும் கப்பல் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என U.S pacific Fleet ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் எத்தனை வீரர்கள் பயணித்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
ஆனால், வழக்கமான நடவடிக்கையின் போது ஹெலிகாப்டரில் நான்கு வீரர்கள் பயணிப்பார்கள் என கடற்படை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.