அரபிக் கடலில் விழுந்த அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்: ஒருவரை காணவில்லை: தேடும் பணி தீவிரம்
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று அரபிக்கடல் பகுதியில் அவசர நிலையில் தரையிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரபிக் கடலில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான MH-60S Seahawk ரக ஹெலிகாப்டர் ஒன்று கடந்த புதன்கிழமை அரபிக்கடல் பகுதியில் அவசர தரையிறக்கம் செய்தது.
இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 3 விமான பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் நலமாக இருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
sentdefender: According to U.S. Naval Forces Central Command / U.S. 5th Fleet, a U.S. Navy MH-60S "Sea Hawk" assigned to the USS George H.W. Bush (CVN-77) made an emergency water landing in the Arabian Sea at approximately 3:30 a.m. ET.
— NΞMICO (@NemicoNetwork) July 1, 2026
Three of the fou… pic.twitter.com/iTHlL3eUH8
மேலும் இந்த விபத்து சம்பவத்தில் காணாமல் போன மற்றொரு விமான பயணியை தீவிரமாக தேடி வருவதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர் USS George H.W Bush என்ற விமானம் தாங்கி போர் கப்பலில் இருந்து பணிகளை மேற்கொண்டு வந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த விபத்துக்கு எந்தவொரு புறக்காரணிகள் மற்றும் விரோத செயல்கள் எதுவும் இல்லை என்று அமெரிக்க கடற்படையின் 5வது பிரிவு விளக்கியுள்ளது.

ஆனால் இந்த விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து கண்டறிய முறையான விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து ஆனாலும், இரு நாட்டு படைகளும் அவ்வப்போது தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால் இந்த பிராந்தியத்தில் அமெரிக்க படைகள் தொடர்ந்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தும் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |