அமெரிக்காவில் திடீரென இடிந்து விழுந்த பார்க்கிங் லாட்: இணையத்தில் பரவும் வீடியோ காட்சிகள்
அமெரிக்காவில் பார்க்கிங் லாட் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன் 4 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
இடிந்து விழுந்த பார்க்கிங் லாட்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பல அடுக்கு பார்க்கிங் லாட் திடீரென இடிந்து விழுந்தது, இதில் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன் நான்கு பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
லோயர் மன்ஹாட்டன் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில், விரிசல் அடைந்த கான்கிரீட் குழம்பில் பல கார்கள் ஒன்றின் மேல் ஒன்று குவிந்து கிடப்பதை சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ காட்சிகளில் பார்க்க முடிகிறது.
நியூயார்க்கின் கட்டிடத் துறையின் செயல் தலைவர் காசிமிர் விலென்சிக் வழங்கிய தகவலில், நகரின் ஆன் தெருவில் உள்ள கட்டிடத்தின் பாதாள அறைக்கு செல்லும் வழி முழுவதும் இடிந்து விழுந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
அதன் வெளிப்புறம் அப்படியே இருக்கிறது என்றாலும், அதிகாரிகள் மேலும் இடிந்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
Reuters
ஒருவர் உயிரிழப்பு
இடிபாடுகளின் போது கட்டிடத்தில் 6 தொழிலாளர் இருந்தாக நம்பப்படும் நிலையில், ஆறு பேரும் தீயணைப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதை அடுத்து நான்கு பேர் நிலையான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
AFP
ஆறாவது நபர் மருத்துவ சிகிச்சையை மறுத்துவிட்டதாக தீயணைப்புத் துறையின் செயல்பாட்டுத் தலைவர் ஜான் எஸ்போசிட்டோ தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அந்த பகுதியை பொதுமக்கள் தவிர்க்குமாறு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.