அமெரிக்காவின் உதவியை இனி நேட்டோ எதிர்பார்க்க வேண்டாம்: மீண்டும் வலியுறுத்திய ட்ரம்ப்
ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் நேட்டோ நாடுகள் உதவ மறுத்துள்ளது ஏமாற்றமளித்ததாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கு தேவை இல்லை
நேட்டோ நாடுகளுக்கு ஒரு உதவி தேவைப்படும் என்றால், இனி அமெரிக்காவை நாட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மியாமியில் நடைபெற்ற ஒரு முதலீட்டு மன்றத்தில் பேசிய ட்ரம்ப், நாங்கள் நேட்டோவிற்காக ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்களைச் செலவிடுகிறோம், அவர்களைப் பாதுகாக்கிறோம், அவர்களுக்கு ஒரு உதவி தேவை என்றால் எப்போதும் உடனிருக்கிறோம்.
ஆனால், தற்போது அவர்களின் நடவடிக்கைகள், இனி அவர்களின் உதவி அமெரிக்காவிற்கு தேவை இல்லை என்ற முடிவுக்கு வர வைத்துவிட்டனர் என்றார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல் தொடங்கியதிலிருந்து, மேற்கத்திய நட்பு நாடுகளின் ஆதரவின்மை குறித்து ட்ரம்ப் மீண்டும் மீண்டும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும், வளைகுடாப் பகுதியின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு ஒரு முக்கியக் கடல் வழியாகத் திகழும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க உதவுவதற்காகப் படைகளை அனுப்புவதிலும் நேட்டோ உறுப்பு நாடுகள் தயக்கம் காட்டின.
ஈரான் மீதான தாக்குதலை அடுத்து, ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடங்கியது. ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தின் காரணமாக கப்பல் நிறுவனங்கல் தயங்கின.

வெறும் காகிதப்புலிகள்
இதனால் உலகளாவிய எண்ணெய் விலை உச்சம் தொட்டது. பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஆறு முக்கிய வல்லரசுகள், தாங்கள் பொருத்தமான முயற்சிகளுக்குப் பங்களிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியதுடன், எவ்வித உறுதியளிப்பையும் செய்யவில்லை.
ஈரான் ட்ரோன் தாக்குதலுக்கு பயந்து ட்ரம்பும் தமது போர்க்கப்பல்களை ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கு பாதுகாப்பளிக்க முன்வரவில்லை.

ஆனால், நேட்டோ உறுப்பு நாடுகளை கோழைகள் என ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார். பிரித்தானியா உள்ளிட்ட நட்பு நாடுகள் அனைத்தும் அமெரிக்க உதவி இல்லை என்றால் வெறும் காகிதப்புலிகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போது இராணுவ ரீதியாகச் சிதைந்துபோயுள்ள, அந்தப் பைத்தியக்கார நாடான ஈரானுக்கு எதிராக உதவ, நேட்டோ நாடுகள் துளியளவும் எதையும் செய்யவில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |