ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்கள்: டிரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கை
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டேன் என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இழுபறியில் அமைதி ஒப்பந்தம்
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தையானது முடிவுகள் எட்டப்படாமல் இழுபறியில் நீடித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அவசரப்பட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

நான் நல்லதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புகிறேன், என்னால் இப்போதே ஒரு ஒப்பந்தத்தை செய்ய முடியும் ஆனால் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. ஈரானுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஆனால் ஈரானுக்கான காலம் ஓடிக்கொண்டிருக்கிறது, முதல் 4 வாரங்களிலேயே ஈரானை ராணுவ ரீதியாக வென்றுவிட்டோம். தற்போது ஈரானின் எத்தகைய ஒப்பந்தத்திற்கு தயார் ஆகிறார்கள் என்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம், ஒருவேளை அவர்கள் ஒப்பந்தத்திற்கு தயாராக இல்லை என்றால் மீண்டும் ராணுவ ரீதியாக ஈரானை முடித்து விடுவோம்.
அணு ஆயுதங்கள் பயன்படுத்தும் எண்ணம் இல்லை
இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அணு ஆயுதம் பயன்படுத்துவது குறித்து இதுவரை பரிசீலிக்கவில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதம் இல்லாமலேயே ஈரானை அழித்து விட்டோம், அப்படி இருக்கையில் நாம் ஏன் அணு ஆயுதங்களை அவர்களுக்கு எதிராக பயன்படுத்த வேண்டும்.

மேலும், அணு ஆயுதங்களை யாரும் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஈரான் தலைமை குழப்பத்தில் இருப்பதாகவும், அவர்களுக்குள்ளேயே பூனை - நாய் போல் சண்டையிட்டு கொள்வதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தற்காலிக போர் நிறுத்த காலக்கட்டத்தில் ஈரான் தங்கள் ஆயுத கிடங்கை மீண்டும் நிரப்பி இருக்க கூடும், ஆனால் அவற்றையும் ஒரு நாளுக்கு அமெரிக்கா அழித்துவிடும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |