ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து தகவல் அளித்தால் ரூ.188 கோடி - அமெரிக்கா அறிவிப்பு
us offer 188crores reward for info on iran nuclear program: ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.188 கோடி வரை வெகுமதி வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் உள்ளதாக கூறி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வைத்துள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

ஈரானின் அணு ஆயுத கட்டமைப்பை அழித்து விட்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

போரை முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா சிறிய அளவிலான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
தகவல் அளித்தால் ரூ.188 கோடி வெகுமதி
இந்நிலையில், ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி மற்றும் இடமாற்றம் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஈரானின் அணுசக்தித் திட்டம், அதன் வசதிகள், உபகரணங்கள், மற்றும் விஞ்ஞானிகள் போன்ற அதனுடன் தொடர்புடைய பணியாளர்களின் நடமாட்டம் ஆகியவை குறித்த தகவல்களை வழங்குபவர்களுக்கு, 'Rewards for Justice' அமைப்பு 20 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.188 கோடி) வரை வெகுமதியையும், சாத்தியமான இடமாற்றத்தையும் வழங்குகிறது" என தெரிவித்துள்ளது.
Rewards for Justice is offering a reward of up to $20 million and possible relocation for information about Iran’s nuclear program, including its facilities, equipment, and associated personnel, such as those in the scientific community, or the movement of any of the above. Submit a tip: https://t.co/A8uRQJSosj
— U.S. Central Command (@CENTCOM) November 7, 2026
மேலும் தனது அறிக்கையில், "2025 ஆம் ஆண்டில், ஈரான் யுரேனியத்தை 60 சதவீதத் தூய்மைக்குச் செறிவூட்டி வருவதாக சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) அறிவித்தது. இந்த அளவு, ஒரு அணு ஆயுதத்திற்குத் தேவையான 90 சதவீதத் தூய்மையை எட்டுவதற்கு மிக அருகிலுள்ள ஒரு தொழில்நுட்பப் படியாகும்.
இத்தகைய உயர் செறிவூட்டல் அளவில் யுரேனியத்தை உற்பத்தி செய்யும் அணு ஆயுதம் இல்லாத ஒரே நாடு ஈரான் மட்டுமே. இந்த அளவை மேலும் செறிவூட்டினால், அது பல அணு ஆயுதங்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்று வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.
பாதுகாப்புக் கடமைகள் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையின் விதிமுறைகளுக்கு அந்த ஈரான் இணங்காததன் விளைவாக, centrifuges போன்ற முக்கிய பாகங்களின் ஈரானின் உற்பத்தி மற்றும் இருப்பு குறித்த தகவல் தொடர்ச்சியை அந்த முகமை இழந்துள்ளது" என குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க மக்களின் உயிர்களையும் நலன்களையும் பாதுகாக்கும் தகவல்களுக்குப் பணம் வழங்குவதற்காக, இந்தத் திட்டம் 1984 ஆம் ஆண்டில் அமெரிக்க வெளியுறவுத் துறையின் தேசியப் பாதுகாப்பு வெகுமதித் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் நிறுவப்பட்டது.