தந்தையின் காதலியை தாக்கி தீ வைத்த மகன்: மாடியில் இருந்து குதித்து தப்பிய முயற்சித்த பெண்
அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள இல்லத்தில் வியாழக்கிழமை தந்தையின் காதலியை தாக்கி தீ வைத்த மகனின் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தந்தையின் காதலியை தாக்கிய மகன்
அமெரிக்காவில் கடந்த வியாழக்கிழமை ராபி ராபின்சன் ஜூனியர்(23) என்ற இளைஞர் ஒருவர், ஓஹியோவில் உள்ள இல்லத்தில் தந்தையின் காதலியை கொடூரமாக தாக்கி, பின்னர் தீ வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையின் காதலியான பெயர் வெளியிடாத 50 வயது பெண்ணை, ராபி ராபின்சன் முதலில் கடுமையாக தாக்கியுள்ளார், பின் அவர் மீது திரவத்தை ஊற்றி தீ வைத்துள்ளார்.
WLWT
பாதிக்கப்பட்ட பெண் உயிர் பிழைப்பதற்காக இரண்டாவது மாடியில் இருந்து குதித்த நிலையில், உதவிக்காக அலறியதுடன், தன்னால் மூச்சு விட முடியவில்லை என்றும், வீட்டிற்குள் மூச்சு உள் இழுப்பான் (inhaler) இருப்பதாகவும் தெரிவித்து உதவி கேட்டு கத்தியுள்ளார்.
அருகில் உள்ளவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விரைவாக பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் இந்த பயங்கர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் கோமா நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
FOX 19 Now
கைது செய்யப்பட்ட இளைஞர்
இதற்கிடையில் வெளியான டேஷ் கேம் காட்சிகளில், ராபி ராபிசன் தந்தையின் காதலியின் மோசமான காயங்கள் தொடர்பாக அதிர்ச்சியையும், தன்னுடைய அப்பாவித்தனத்தை மீண்டும் மீண்டும் அறிவித்தார்.
இருப்பினும் பொலிஸார் ராபி ராபின்சனை கைது செய்து $200,000 பத்திரத்தில் கீழ் பட்லர் கவுண்டி சிறையில் அடைத்துள்ளனர்.
ஆனால் தந்தையின் காதலியை எதற்காக கொடூரமாக ராபி ராபின்சன் ஜூனியர் தாக்கினார் என்பதற்கான காரணம் இன்னும் முழுமையாக வெளியே தெரியவரவில்லை.
Robbi Robinson Jr(Butler County Jail)