ரஷ்யாவிற்கு வெளியே... தடை விதிக்கப்பட்ட எண்ணெய் நிறுவனத்திற்கு ட்ரம்ப் சிறப்பு அனுமதி
ரஷ்யாவிற்கு வெளியே செயல்படும் Lukoil எண்ணெய் நிறுவனத்தின் நிலையங்கள் பரிவர்த்தனைகளை முன்னெடுக்கலாம் என ட்ரம்ப் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம் தடை
அக்டோபர் மாதம் Lukoil எண்ணெய் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு குறுகிய கால விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Lukoil உள்ளிட்ட நிறுவனங்களின் வருவாய், உக்ரைனுக்கு எதிரான போரில் செலவிடப்படுவதாக ட்ரம்ப் நிர்வாகம் குற்றஞ்சாட்டியிருந்தது. தற்போது ஐரோப்பா, மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்கா முழுவதும் சுமார் 2,000 எண்ணெய் நிலையங்களுக்கான பரிவர்த்தனை அனுமதியை அமெரிக்கா வழங்கியுள்ளது.
எதிர்வரும் 2026 ஏப்ரல் 26 ஆம் திகதி வரையில் இது அமுலில் இருக்கும். ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களில் Lukoil மற்றும் Rosneft ஆகிய நிறுவனங்கள் மீது அக்டோபர் மாதம் ட்ரம்ப் நிர்வாகம் தடை விதித்தது.
இந்த நெருக்கடியான கட்டத்தில், சுமார் 22 பில்லியன் டொலர் மதிப்புள்ள அதன் சர்வதேச சொத்துக்களை வாங்கும் முயற்சிகளும் பல நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டது.
துருக்கியில் சுமார் 600
ட்ரம்ப் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ரஷ்யா மீது நேரடியாக பொருளாதார தடைகளை விதிப்பது அதுவே முதல் முறை. கடந்த மாதம், வெளிநாட்டு சொத்துக்களை வாங்குவது குறித்து டிசம்பர் 13 வரை லுகோயிலுடன் விவாதிக்க சர்வதேச நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிகாரிகள் தரப்பு அனுமதி அளித்தது.

ஆனால் குறிப்பிட்ட ஒப்பந்தங்களுக்கு அவர்களுக்கு ஒப்புதல் தேவைப்படும் நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் நியூ ஜெர்சி, பென்சில்வேனியா மற்றும் நியூயார்க்கில் சுமார் 200 பிராண்டட் எண்ணெய் நிலையங்களை லுகோயில் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
மட்டுமின்றி, மால்டோவா மற்றும் பல்கேரியாவில் முதன்மையான சில்லறை விற்பனையாளர்களில் ஒருவரான லுகோயில், துருக்கியில் சுமார் 600 நிலையங்களையும், ருமேனியாவில் 300 க்கும் மேற்பட்ட நிலையங்களையும் இயக்கி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |