நடுவானில் விமான பணியாளரை முத்தமிட்ட பயணி: மதுபோதையில் அத்துமீறிய முதியவர்
அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் மதுபோதையில் முதியவர் ஒருவர் விமான பணியாளருக்கு முத்தமிட்டு தகராறில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
விமான பணியாளருக்கு முத்தம்
டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து அலஸ்காவிற்கு பறந்து கொண்டு இருந்தது.
அப்போது டேவிட் ஆலன்(61) என்ற முதல் வகுப்பில் பயணம் செய்த முதியவர், விமானத்தின் ஆண் பணியாளர் ஒருவருக்கு முத்தம் கொடுத்து தகராறில் ஈடுபட்டார்.
முதியவர் டேவிட் ஆலன் விமானம் புறப்படுவதற்கு முன்பே மது அருந்தியதாக கூறப்படுகிறது. மேலும் விமானிக்கு எடுத்து செல்லப்பட்ட உணவையும் கீழே தட்டி விட்டதாக தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட முதியவர்
இந்நிலையில் விமானம் தரையிறங்கியதும் முதியவர் டேவிட் ஆலன் விமான நிலைய அதிகாரிகளால் மடக்கி பிடிக்கப்பட்டார்.
Delta News Hub
பின் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் எதுவுமே செய்யவில்லை என்று அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
ஆனால் மது அருந்தியதை மட்டும் இறுதியில் அவர் ஒப்புக் கொண்டார், இதையடுத்து முதியவர் டேவிட் ஆலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.