லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பெண்கள் அணியின் பயிற்சியாளர் தற்கொலை! பாலியல் குற்றச்சாட்டு எழுந்த பின் எடுத்த முடிவு
2012ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஃபியர்ஸ் ஃபைவ் பெண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்த ஜோன் கெடெர்ட் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு ஜோன் உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், இவர் 2012 லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ‘ஃபியர்ஸ் ஃபைவ்’ என அழைக்கப்படும் பெண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
மேலும் ஜோன் கெடெர்ட் 2012 இல் பெண்கள் ஜிம்னாஸ்டிக்ஸ் அணியின் தலைவராக இருந்தார் மற்றும் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்களை துஷ்பிரயோகம் செய்த அணி மருத்துவர் லொறி நாசருடன் நெருக்கமாக பணியாற்றினார்.
இந்த நிலையில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, ஜோன் 20 மனித கடத்தல், முதல் நிலை பாலியல் வன்கொடுமை, இரண்டாம் நிலை பாலியல் வன்கொடுமை, குற்றவியல் தொழில் மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரியிடம் பொய் சொன்னது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஜோன் தனது உயிரை மாய்த்துக் கொண்ட பின்னர் வியாழக்கிழமை பிற்பகல் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
