அமெரிக்க படைகள் நடத்திய துல்லிய தாக்குதல்: கொல்லப்பட்ட ட்ரென் டி அராகுவா தலைவர்
வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ட்ரென் டி அராகுவா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.
வெனிசுலாவில் அமெரிக்கா தாக்குதல்
வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், வெனிசுலாவில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ட்ரென் டி அராகுவா(Tren de Aragua) குற்றக்கும்பலின் தலைவர் ஹெக்டர் ரஸ்தன்ஃபோர்ட் குரேரோ புளோரஸ்(Hector Rusthenford Guerrero Flores) கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ட்ரென் டி அராகுவா கும்பலின் தலைவர் ஹெக்டர் ரஸ்தன்ஃபோர்ட் கொல்லப்பட்டதை வெனிசுலா அரசாங்கமும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
வெனிசுலாவின் போலிவாரில் அந்நாட்டு படைகளுடன் அமெரிக்க படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ட்ரென் டி அராகுவா கும்பலின் பின்னணி
Earlier this week, the @DeptofWar — in full collaboration with Venezuelan security forces — conducted a kinetic strike on a Tren de Aragua (TdA) compound in Venezuela. TdA founder & leader Hector Rusthenford Guerrero Flores, aka “Niño Guerrero,” was confirmed killed during the…
— Secretary of War Pete Hegseth (@SecWar) June 13, 2026
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ட்ரென் டி அராகுவா கும்பல் பல அமெரிக்க நகரங்களில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு முக்கிய காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது இந்த குற்றக்கும்பலின் தலைவர் கொல்லப்பட்டு இருப்பது அராகுவா கும்பலை முற்றிலுமாக முடக்குவதற்கான முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |