பெற்ற குழந்தைகளை நாய் கூண்டில் அடைத்து சித்திரவதை செய்த பெற்றோர்: பொலிஸார் அதிரடி
அமெரிக்காவில் பெற்றோர் ஒருவர் தங்களுடைய 6 குழந்தைகளை நாய் கூண்டுக்குள் அடைத்து சித்திரவதை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பயங்கரம்
அமெரிக்காவின் நிவேடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரின் ஃபிளமிங்கோ சாலையில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பெற்றோர் ஒருவர், தங்களுடைய 6 குழந்தைகளை நாய் கூண்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த குழந்தைகள் கடுமையாக தாக்கப்பட்டு இருப்பதுடன், உணவளிக்கப்படாமலும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.
8news now
பொலிஸாருக்கு தகவல் கொடுத்த மனைவி
இந்நிலையில் ஃபிளமிங்கோ சாலையில் அமைந்துள்ள மருந்துக் கடையில் இருந்து குழந்தைகளின் தாயான அமண்டா ஸ்டாம்பர் அவசர எண்ணான 911ஐ தொடர்பு கொண்டு தகவலை தெரியப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், பல நாய்களுடன் கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய கணவர் டிராவிஸ் டாஸ் (31) மற்றும் மனைவி அமண்டா ஸ்டாம்பர் (33) ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
8news now
மொத்தம் இந்த தம்பதிக்கு 2 முதல் 11 வயதுடைய 7 குழந்தைகள் இருந்த நிலையில், அவர்களில் ஒரு குழந்தை தாக்கப்பட்டதில் உயிரிழந்துவிட்டதாக கணவர் டிராவிஸ் டாஸ் எண்ணிக் கொண்டு இருந்துள்ளார் எனவும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த 2 குழந்தைகளுக்கு கண்கள் வீங்கி மூடப்பட்டு இருந்து, அத்துடன் குழந்தைகள் அனைவரும் தீவிரமான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாயிடம் விசாரணை
குழந்தைகளின் தாயே பொலிஸாருக்கு தகவல் தெரிவித்து இருந்த நிலையில், இந்த தகவலை ஏன் முன்கூட்டியே தெரியப்படுத்தவில்லை என்று டிராவிஸ் டாஸின் மனைவியான அமண்டா ஸ்டாம்பரிடம் பொலிஸார் கேள்வி எழுப்பினர்.
அப்போது, தானும் கணவர் டிராவிஸ் டாஸால் பாதிக்கப்பட்டுள்ளேன், தற்போது நடந்துள்ள இந்த கைது சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு எனக்கும், என்னுடைய குழந்தைகளும் கடுமையான உடல் ரீதியான துன்புறுத்தல்கள் அதிகரித்தது.
8news now
அவர் எங்களை கயிறுகளால், பெல்டால், கடினமான பாத்திரங்கள் கொண்டு அடிப்பார், எனவே எனது உயிர்காகவும், எனது குழந்தைகளின் உயிர்காகவும் பயந்து முன்கூட்டியே தெரிவிக்காமல் வைத்து இருந்தேன் என மனைவி அமண்டா ஸ்டாம்பர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |