அமெரிக்க பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம் - பெற்றோர் குடியுரிமை சான்று காட்ட வேண்டும்
US passport rules may change for parents: அமெரிக்காவில் பாஸ்போர்ட் விதிகளில் புதிய மாற்றங்கள் வரவிருக்கின்றன.
பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம்
குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது பெற்றோர் தங்களது குடியுரிமை அல்லது குடியேற்ற நிலையை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம்.
அமெரிக்க வெளிவிவகார துறை தயாரித்து வரும் வரைவு வழிகாட்டுதலின் படி, பெற்றோர் தங்கள் குடியுரிமை சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

குடியுரிமையை கட்டுப்படுத்தும் முயற்சி
இது, ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகஸ்ட் 6 அன்று வெளியிட்ட EO 14418 என்ற நிர்வாக உத்தரவின் தொடர்ச்சியாகும்.
இந்த உத்தரவு, “பிறப்புரிமை குடியுரிமை” (Birthright Citizenship) குறைக்கவும், “Birth Tourism” எனப்படும் நடைமுறையை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
அதாவது, அமெரிக்காவில் குழந்தை பிறந்தால் தானாகவே குடியுரிமை கிடைக்கும் என்ற நடைமுறையை கட்டுப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது பெற்றோர் தங்கள் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலையை நிரூபிக்க வேண்டியிருக்கும்.
இதனால், அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளின் குடியுரிமை தொடர்பான விவகாரங்களில் பெரிய மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த வரைவு வழிகாட்டுதலை ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தற்போது இது ஆலோசனை நிலையில் உள்ளது. நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளின் குடியுரிமை தொடர்பான சட்டங்களில் முக்கியமான மாற்றம் நிகழும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |