இந்தியர் ஒருவரின் கொடுஞ்செயல்... லொறி சாரதிகளுக்கான விசாவை முடக்கிய வல்லரசு நாடு
அமெரிக்காவில் நடந்த மிக மோசமான சாலை விபத்தொன்று ஜனாதிபதி ட்ரம்ப் வட்டாரத்தில் கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அதிரடி முடிவாக லொறி சாரதிகளுக்கான விசா விநியோகத்தை நிறுத்தியுள்ளனர்.
தொழிலாளர் விசா
அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ தமது உத்தியோகப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் இதை அறிவித்துள்ளார். ’வணிக லொறி சாரதிகளுக்கான அனைத்து தொழிலாளர் விசாக்களையும் உடனடியாக இடைநிறுத்துவதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க சாலைகளில் பெரிய டிராக்டர்-டிரெய்லர் லொறிகளை இயக்கும் வெளிநாட்டு சாரதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அமெரிக்க மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதோடு அமெரிக்க லொறி சாரதிகளின் வாழ்வாதாரத்தையும் குறைத்து வருகிறது என்றார்.
Effective immediately we are pausing all issuance of worker visas for commercial truck drivers.
— Secretary Marco Rubio (@SecRubio) August 21, 2025
The increasing number of foreign drivers operating large tractor-trailer trucks on U.S. roads is endangering American lives and undercutting the livelihoods of American truckers.
புளோரிடாவில் உள்ள ஒரு பிரதான சாலையில் சட்டவிரோதமாக யு-டர்ன் செய்யும்போது ஏற்பட்ட மிக மோசமான சாலை விபத்தில் மூவர் சிக்கி பலியானதாக ஒரு லொறி சாரதி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையிலேயே ரூபியோவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த விவத்து தொடர்பாக அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியரான ஹர்ஜிந்தர் சிங் என்பவர் மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தவர் என்றும், விபத்துக்குப் பிறகு நடந்த விசாரணையில் அவர் ஆங்கில மொழித் தேர்வில் தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது.
பொறுப்பு ஏற்க வேண்டும்
இந்த விவகாரம் பரவலான ஊடக கவனத்தை ஈர்த்துள்ளதுடன் புளோரிடா மாகாண அதிகாரிகளால் ஜனாதிபதி ட்ரம்ப் வட்டாரத்திற்கும் இது தொடர்பில் தகவல் அளிக்கப்பட்டது.
மட்டுமின்றி, இந்த வழக்கு அரசியல் வட்டாரத்திலும் மோதலை உருவாக்கியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய சிங் தனது வணிக லொறி சாரதி உரிமத்தை கலிபோர்னியாவில் இருந்து பெற்றுள்ளதுடன் அங்கேயே வசித்தும் வந்தார்.
கலிபோர்னியாவில் ஜனநாயகக் கட்சி ஆட்சி செய்வதுடன் குடியேற்றத்திற்கு எதிரான ட்ரம்பின் ஒடுக்குமுறையை எதிர்க்கிறது. இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய சிங்கிற்கு உரிமம் வழங்கியதற்கு கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ட்ரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |