அமெரிக்காவில் 18 வயது மகனை சுட்ட தந்தை: தந்தையை சுட்டுக் கொன்ற பொலிஸார்
அமெரிக்காவில் பொலிஸாரை துப்பாக்கியால் சுட்ட நபரை பொலிஸார் சுட்டுக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
மகனுடன் ஏற்பட்ட வாக்குவாதம்
அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தின் பிலடெல்பியா நகரில் விட்டேகர் அவென்யு 7500 பிளாக்கில் உள்ள வீடு ஒன்றில் தந்தைக்கும் 18 வயதுடைய மகனும் இடையே வீடியோ கேம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அவர்களது வீட்டில் இருந்த உறவினர் ஒருவரும் இந்த வாக்குவாதத்தில் இணைந்துள்ளார். ஒரு கட்டத்தில் 18 வயது மகனும், உறவினரும் பேச்சை நிறுத்திக் கொண்டு மற்றொரு அறைக்கு சென்றுள்ளனர்.
Staff Photographer
ஆனால் ஆத்திரத்தில் கையில் துப்பாக்கியுடன் வந்த தந்தை தன்னுடைய 18 வயது மகனையும், உறவினரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
எப்படியோ சமாளித்து கொண்டு 18 வயது மகனும், உறவினரும் அவசர அழைப்பான 911க்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
பொலிஸாரை துப்பாக்கியால் சுட்ட தந்தை
இதையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்த போது கையில் துப்பாக்கியுடன் இருந்த தந்தை, பொலிஸாரை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 2 பொலிஸ் அதிகாரிக்கு காலில் காயமும், ஒருவருக்கு கை விரலிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸார் மீது துப்பாக்கி சூடு நடத்தியவரை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டு சாய்த்தனர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் காயமடைந்த பொலிஸார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளனர்.
பள்ளியில் திடீரென 100 மாணவிகளுக்கு கால்கள் செயலிழப்பு: மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடிய சக மாணவிகள்
அத்துடன் தந்தையால் சுடப்பட்ட 18 வயது மகனும், உறவினரும் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |