மதுரோவை போல் அலி கமேனியை கைது செய்ய திட்டம்? 10 C-17 விமானங்களை அனுப்பிய அமெரிக்கா
கடந்த ஜனவரி 3 ஆம் திகதி, வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து அமெரிக்காவிற்கு கொண்டு சென்று சிறையில் அடைந்துள்ளது.
ஒரு நாட்டின் ராணுவம், இன்னொரு நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஜனாதிபதியை கைது செய்துள்ள சம்பவத்திற்கு ரஷ்யா, சீனா, ஈரான் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஈரானில் வெடித்த போராட்டம்
இந்நிலையில், வெனிசுலாவை போல் ஈரான் விவகாரத்திலும் அமெரிக்கா தலையிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Credits: AP
ஈரானில் அதிகரித்து வரும் பண வீக்கம் மற்றும் ரியாலின் மதிப்பு குறைந்து வருவதை கண்டித்து, கடந்த 10 நாட்களாக, ஈரானில் 250க்கும் அதிகமான இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் தற்போது வரை 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழலில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்து அதன் மூலம் ஈரானில் ஆட்சி மாற்றத்தை மேற்கொள்ளும் வகையில் அமெரிக்கா தலையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டக்காரர்களை ஈரான் அரசு கொன்றால் அமெரிக்கா இந்த விவகாரத்தில் தலையிடும் என டிரம்ப் சமீபத்தில் எச்சரித்திருந்தார்.

Credits: (X @visegrad24)
மேலும், "Make Iran Great Again" என வாசகம் பொறிக்கப்பட்ட தொப்பியுடன் டிரம்ப் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
10 C-17 விமானங்கள்
இந்த சூழலில், வழக்கத்திற்கு மாறாக அமெரிக்கா தனது 10 C-17 விமானங்களை, பிரித்தானியாவில் உள்ள RAF ஃபேர்ஃபோர்டு மற்றும் RAF மில்டன்ஹால் ராணுவ தளத்திற்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Something unusual appears to be going on today at RAF Fairford near Gloucestershire in the United Kingdom, with at least 10 C-17A Globemaster IIIs with the U.S. Air Force arriving at the base or currently crossing the Atlantic from the United States. Almost all of the C-17s… https://t.co/LfyTSdEsQr
— OSINTdefender (@sentdefender) January 3, 2026
கடைசியாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான 12 நாள் போரின் போது, அமெரிக்கா ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது B-2 குண்டுவீச்சு விமானங்கள் மூலம் தாக்கியபோது, இதே போல் C-17 விமானங்களை இந்த தளத்தில் அதிகப்படுத்தியது.
வெனிசுலாவில் மதுரோவை கைது செய்த அமெரிக்கா பிரிவு, இந்த தளத்தில் இருக்க வாய்ப்புள்ளதாகவும், அந்த பிரிவு ஈரான் உச்சத்தலைவர் அலி கமேனியை கைது செய்ய வாய்ப்புள்ளதாக ஊகம் எழுந்துள்ளது.
ரஷ்யாவிற்கு தப்பி செல்லும் கமெனி?
முன்னதாக ஈரான்- இஸ்ரேல் போரின் போதே அலி கமேனியை கைது செய்யவது எங்களுக்கு பெரிய விடமில்லை என டிரம்ப் கூறியிருந்தார்.

Credits: Reuters
அதேபோல், ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு போராட்டம் தீவிரமடைந்தால், தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய கூட்டாளிகளுடன் ரஷ்யாவிற்கு தப்பி செல்லும் திட்டத்தை கமெனி வைத்துள்ளாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |