சுற்றுலாப் பயணிகளின் சமூக ஊடகங்களை சரிபார்க்க அமெரிக்கா திட்டம்: 60 நாட்கள் கால அவகாசம்
அமெரிக்காவுக்கு சுற்றுலா வரும் அனைவருக்கும் சமூக ஊடக பரிசோதனை நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய விதிமுறை
அமெரிக்காவிற்கு சுற்றுலாவிற்காக வருகை தரும் பயணிகளின் சமூக ஊடக விவரங்கள் மற்றும் உயிரியல் அடையாள(Biometric) பரிசோதனைகளை கட்டாயமாக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த கடுமையான விதிமுறைகள் மூலம் அமெரிக்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் குறித்த தரவுகளை கூடுதலாக பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு துறை(CBP) வெளியிட்டுள்ள புதிய நடைமுறை, பிரித்தானியா போன்ற அமெரிக்காவுக்கு விசா தேவையில்லாத நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கான சமூக ஊடக விவரங்கள்
புதிய நடைமுறையின் படி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடந்த 5 ஆண்டுகளில் அவர்களின் சமூக ஊடக தனிப்பட்ட தொடர்புகள், சமூக ஊடக அடையாளங்கள் மற்றும் குடும்ப விவரங்கள் குறித்த முழு விவரத்தையும் வேண்டும்.
ESTA(மின்னணு பயண அங்கீகாரம்) முறையில் அமெரிக்காவுக்கு வரும் பயணிகள், தங்களது விண்ணப்ப செயல்முறையின் போதே செல்பி புகைப்படம், விரிவாக்கப்பட்ட பயோமெட்ரிக் சேகரிப்பு ஆகிய தேவையான தகவல்களை சேகரிக்க CBP முன்மொழிந்துள்ளது.
அமெரிக்காவின் கூட்டாட்சி பதிவேட்டில் வெளியிடப்பட்டுள்ள முன்மொழியப்பட்ட இந்த புதிய விதிமுறைகள் குறித்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்க 60 நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |