ஈரானுக்குள் புகுந்து யுரேனியம் கையிருப்பை கைப்பற்ற திட்டம்: அதிரடிப்படையை களமிறக்கும் அமெரிக்கா
ஈரானின் அணுசக்தி கையிருப்பை கைப்பற்ற அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் யுரேனியம் கையிருப்பை கைப்பற்ற திட்டம்
ஈரானின் வசமுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அதிரடியாக கைப்பற்ற சிறப்பு அதிரடிப்படை ஈரானுக்குள் அனுப்ப அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆலோசித்து வருவதாக ஆக்ஸியோஸ்(Axios) செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
ஈரானின் அணு ஆயுத திட்டத்திற்கு எதிராகவே அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இந்த போர் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.

இந்த இலக்கை அடைய, அதாவது அணுசக்தி பொருட்களை கைப்பற்ற தற்போது பல்வேறு உயர் ஆபத்து கொண்ட கமாண்டோ திட்டங்களை ஆலோசித்தும் வருவது தெரியவருகிறது.
ஈரானிடம் தற்போது 450 கிலோகிராம் எடையுள்ள 60% தூய்மையான செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், இது அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான அளவுக்கு மிக நெருங்கியதாகும்.
பொருளாதார நடவடிக்கைகள், சைபர் தாக்குதல்கள் மட்டும் இதனை தடுக்க முடியாது என்ற காரணத்தினால், நேரடி தலையீட்டை முன்னெடுக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

ஈரானின் உறுதித் தன்மை
ஈரானின் அணுசக்தி திட்டத்தை முறியடிக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பல ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
நியூயார்க் டைம்ஸின் சமீபத்திய ஆய்வு தகவல்கள் படி, பல்வேறு சர்வதேச அழுத்தங்களுக்கு இடையிலும் ஈரான் தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே 50% அணுசக்தி உள்கட்டமைப்பை வைத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |