நடுவானில் மாயமான விமான மேற்கூரை..! காற்றில் தூக்கி வீசப்பட்ட பணிப்பெண்: 1988ல் நடந்த பயங்கர சம்பவத்தின் பின்னணி
நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த போது அதன் மேற்கூரை உடைந்து மாயமாய் போன அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறி பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நடுவானில் மாயமான விமானத்தின் மேற்கூரை
போக்குவரத்துகளில் மிகவும் பாதுகாப்பான போக்குவரத்து என்றால் அதனை விமான போக்குவரத்து என்று கூறலாம்.
ஏனென்றால், விமான போக்குவரத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றபட்டிருக்கும். அப்படி இருக்கையில், அமெரிக்காவில் 1988ம் ஆண்டு ஏப்ரல் 28ம் திகதி அலோஹா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இரட்டை எஞ்சின், 110 இருக்கைகள் கொண்ட போயிங் 732-200 என்ற விமானத்தில் மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
அதாவது, போயிங் 732-200 என்ற ஜெட் விமானம், 89 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்களுடன் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது, விமானத்தின் ஒரு பகுதி மேற்கூரை திடீரென உடைந்து மாயமாய் பறந்து போனது.
அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால், காயங்களுடன் அனைவரும் உயிர் பிழைத்தனர்.
விமானம் பசிபிக் பெருங்கடல் மேலே சுமார் 24,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்ததால், ஷீட் பெல்ட் அணியாத கிளாராபெல் லான்சிங் என்ற விமானப் பணிப்பெண் அப்படியே காற்றில் பறந்து போனார்.
பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி
இடது இன்ஜினில் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தாலும், எப்படியோ விமான கஹுலுய் ஏர்போர்ட்டில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார், இதனால் பெரும் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.
நடுவானில் பறந்து காணாமல் போன பணிப்பெண்ணின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்பட முடியவில்லை.
இதற்கிடையில், விமானத்தின் கட்டமைப்பில் ஏற்பட்ட தோல்வியும், திடீரென் விமானத்தின் உள் பகுதிக்குள் ஏற்பட்ட டிகம்ப்ரஷனும் தான் இந்த விமான விபத்துக்கு முக்கிய காரணம் என்று அமெரிக்கத் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
இன்னும் 24 மணிநேரத்திற்குள் போர் நிறுத்தம்: இஸ்ரேலில் இருந்து விடுவிக்கப்படும் 300 பாலஸ்தீனிய கைதிகள்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |