விமான ஓடுபாதையில் நடந்து சென்ற நபர் மீது மோதிய விமானம்
அமெரிக்காவில், விமான ஓடுபாதையில் நடந்து சென்ற ஒருவர் மீது விமானம் மோதிய வித்தியாசமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.
ஓடுபாதையில் நடந்து சென்ற நபர்
நேற்று இரவு, அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லாஸ் ஏஞ்சஸ் நோக்கிப் புறப்பட்டுள்ளது Frontier Airlines நிறுவன விமானம் ஒன்று.

அப்போது, ஓடுபாதையில் ஒருவர் நடந்து சென்றதாகவும், விமானம் அவர் மீது மோதியதாகவும் செய்திகள் வெளியாகிவருகின்றன.
அதைத் தொடர்ந்து, விமானத்தின் எஞ்சினில் தீப்பிடித்துள்ளதாகவும், விமானத்துக்குள் புகை சூழ்ந்ததாகவும் விமானி கூறுவது கட்டுப்பாட்டு அறையிலுள்ள ஆடியோவில் பதிவாகியுள்ளது.
அந்த விமானத்தில் 224 பயணிகளூம் 7 விமானப் பணியாளர்களும் இருந்த நிலையில், உடனடியாக விமானம் நிறுத்தப்பட, பயணிகள் பக்கவழிகள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இந்த வித்தியாசமான சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |