கறுப்பின பெண்ணுக்கு நடந்த கொடுமை; 3 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க காவல்துறைக்கு உத்தரவு!
அமெரிக்காவில் கறுப்பின பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட குற்றத்திற்காக, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கிட்டத்தட்ட 3 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கவேண்டுமென சிகாகோ காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் காவல்துறைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தந்தை அடுத்து, நீதிமன்றம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
2019-ஆம் ஆண்டில் நடந்த இந்த சம்பவத்தில், சில காவல்துறை அதிகாரிகள் அந்த பெண்ணின் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, ஒரு குற்றவாளியைத் தேடினர்.
அப்பெண் ஒரு சமூக சேவகர் என்றும், அப்போது உடை மாற்றிக் கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
பொலிஸார் அவளை கைவிலங்கு போட்டு உடையின்றி நிற்க வைத்துள்ளனர. கைவிலங்கிடப்பட்ட நிலையில், சுமார் அரை மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் பொலிஸார் தேடி வந்த குற்றவாளி அந்த வீட்டில் வசிக்காமல் பக்கத்து வீட்டில் இருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பெண் மிகவும் அவமானத்திற்கு உள்ளானார்.
பிப்ரவரி 2021-ல், காவல்துறை அதிகாரிகள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், தன்னை அவமானப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டி அப்பெண் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார். விசாரணையில் 12 பொலிஸாரை பிரதிவாதிகளாக ஆக்கினார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், தகவல்களைச் சரிபார்க்கத் தவறியதால், அந்தப் பெண் தேவையற்ற அவமானத்தையும் துன்புறுத்தலையும் சந்திக்க நேரிட்டதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
காவல்துறையின் தவறான நடத்தைக்காக அந்தப் பெண்ணுக்கு 2.9 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.