கார் மீது ஏறி துப்பாக்கியை காட்டிய பொலிஸ் அதிகாரி: இருப்பினும் வேகமாக பறந்த குற்றவாளியின் கார்
அமெரிக்காவில் தப்பி செல்ல முயன்ற குற்றவாளியின் கார் மீது ஏறி அமர்ந்து துப்பாக்கியை காட்டி இறங்க சொன்ன பொலிஸ் அதிகாரியின் வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரியின் துரித செயல்
அமெரிக்காவில் கைது வாரண்ட் பிறக்கப்பிட்ட குற்றவாளி ஒருவரை சாலையில் மடக்கி பிடித்த பொலிஸார், அவரை உடனடியாக காரை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டனர்.
இதையடுத்து நிலைமையை சுதாரித்துக் கொண்ட குற்றவாளி உடனடியாக காருக்குள் ஏறி அமர்ந்து வாகனத்தை இயக்க முற்பட்டார்.
Shocking footage shows a police officer clinging to the roof of a car as it speeds off in Iowa.
— Sky News (@SkyNews) May 19, 2023
Police officer Patrick McCarty stepped in front of the car when Dennis Guider Jr tried to move off after being pulled over.
Latest videos: https://t.co/8xyWy2cBPY pic.twitter.com/XmKAkV9IN7
அப்போது துரிதமாக செயல்பட்ட பொலிஸ் அதிகாரி பேட்ரிக் மெக்கார்ட்டி(Patrick McCarty) குற்றவாளியின் கார் பானெட்டில் ஏறி மண்டியிட்டு தனது துப்பாக்கியை நீட்டி காரை விட்டு உடனடியாக கீழே இறங்குமாறு உத்தரவிட்டார்.
ஆனால் பொலிஸ் அதிகாரியின் உத்தரவை மதிக்காத குற்றவாளி காரை வேகமாக செலுத்தி முன்னேறுகிறார், இந்த காட்சிகள் மற்றொரு காவல்துறை காரில் பொருத்தப்பட்டு இருந்த கேமராக்களில் பதிவாகி இருந்தது.
தூக்கி வீசப்பட்ட பொலிஸ் அதிகாரி
வேகமெடுத்த குற்றவாளியின் கார் மீது தொங்கிக் கொண்டு இருந்த பொலிஸ் அதிகாரி பேட்ரிக் மெக்கார்ட்டி, ஒரு கட்டத்தில் தன்னுடைய பிடியை இழந்து தரையில் தூக்கி வீசப்படுகிறார்.
இதில் அவருக்கு முதுகில் அடிபட்ட நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் பொலிஸ் அதிகாரிக்கு காயம் ஏற்பட செய்தது போன்ற குற்றத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நபருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 2021ம் ஆண்டு நடந்த நிலையில், தற்போது தான் இந்த காட்சிகளை பொலிஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.