ரோந்து காவலரை தரதரவென்று இழுத்து சென்ற கார்: சாரதி மீது 11 பிரிவுகளில் வழக்கு பதிவு
அமெரிக்காவில் காவல் அதிகாரியை காருடன் சாலையில் தரதரவென்று இழுத்து சென்ற நபரை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
காவல் அதிகாரியை இழுத்துச் சென்ற கார்
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த பொலிஸார் ஒருவர் சாலையில் அதிவேகமாக வந்த காரை நிறுத்தியுள்ளார்.
அப்போது அதே சமயத்தில் காரை ஒட்டி வந்த டெரெக் லோபோ-விடம் ஓட்டுநர் உரிமத்தை பொலிஸார் கேட்டுள்ளார்.
அப்போது திறந்திருந்த கார் கதவு வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த பொலிஸ் அதிகாரியை உள்ளே இழுத்து போட்டு லோபோ காரை வேகமாக ஓட்டிச் சென்றனர்.
சாலையில் இருந்து தரதரவென்று இழுத்து செல்லப்பட்ட காவல் அதிகாரி ஒருவழியாக தன்னை லோபோவின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சாலையில் விழுந்தார்.
இதனால் காவல் அதிகாரி பலத்த காயமடைந்தார், மேலும் சாரதி லோபோவை மறுநாள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மறுநாள் பொலிஸார் கைது செய்தனர்.
அத்துடன் அவர் மீது போதை மாத்திரைகள் வைத்து இருந்தது உட்பட 11 பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |