தீவிரமடையும் உக்ரைன் போர்... தயாராகும் அமெரிக்கா: வெளிவரும் புதிய பின்னணி
ரஷ்யா மீது அதிகரித்த பொருளாதாரத் தடைகளை அறிவிக்க ட்ரம்ப் நிர்வாகம் தயாராகி வருவதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத் தடைகள்
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்கா தலைமையிலான முயற்சிகள் தோல்வியடைந்து வருவதாலும், உக்ரைன் ஜனாதிபதி மேலும் வெளிநாட்டு இராணுவ உதவியை நாடுவதாலும் இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகிறது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய பெசென்ட், இன்று பிற்பகல் அல்லது நாளை காலை முதல் முறையாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் கணிசமாக அதிகரிப்பது தொடர்பில் நாங்கள் அறிவிப்போம் என்றார்.
ஆனால் தடைகளின் தன்மை குறித்த விவரங்களை பெசென்ட் வெளியிடவில்லை. ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் உக்ரைன் முழுவதும் உள்ள தளங்களைத் தாக்கி, ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு இளம் மகள்கள் உட்பட குறைந்தது ஆறு பேரைக் கொன்ற நிலையில் இந்த அறிவிப்பை பெசென்ட் வெளியிட்டுள்ளார்.
இரவு முழுவதும் தொடர்ச்சியாக நடந்த இந்தத் தாக்குதல், குறைந்தது எட்டு உக்ரேனிய நகரங்களையும், தலைநகர் கீவ் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தையும் குறிவைத்தது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
கீவ் நகரில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 29 பேர் காயமடைந்துள்ளனர் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் உள்ள ஒரு மழலையர் பள்ளியையும் ரஷ்ய ட்ரோன்கள் தாக்கின, சம்பவத்தின் போது சிறார்கள் தொடர்புடைய கட்டிடத்தில் இருந்தார்கள் என்றே கூறப்படுகிறது.
உக்ரைன் விருப்பம்
மேயர் இகோர் தெரெகோவ் கூறுகையில், தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார், ஆறு பேர் காயமடைந்துள்ளனர், ஆனால் சிறார்கள் எவரும் உடல் ரீதியாக பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே உக்ரைனின் விமானப்படை தெரிவிக்கையில், 405 தாக்குதல் மற்றும் டிகோய் ட்ரோன்கள் மற்றும் 28 ஏவுகணைகளை ரஷ்யா ஏவியது என குறிப்பிட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுத்த இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறத் தவறிவிட்டன.
போர் நிறுத்தம் மற்றும் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உக்ரைன் விருப்பம் தெரிவித்த பிறகும், தீர்வுக்கான தனது நிபந்தனைகளில் இருந்து பின்வாங்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மறுத்து வருவதற்கு ட்ரம்ப் பலமுறை தமது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால், இந்த விவகாரத்தில் ரஷ்யா மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ட்ரம்ப் நிர்வாகம் தயங்கி வருவதும் ஒரு காரணமாக கூறப்படுகிரது. மட்டுமின்றி, புடின் கூறும் விளக்கங்களை ட்ரம்ப் நம்புவதும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை ஒரு பொருட்டாக மதிக்காததும் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் ட்ரம்ப் தோல்வி கண்டு வருகிறார் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |