ரஷ்ய ஜனாதிபதி புதினை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிபந்தனைகளுடன் சந்திக்க தயார்: அப்படி என்ன நிபந்தனை?
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்திக்க தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்புத்துறையின் செயலர் ஜென் பிசகி தெரிவித்துள்ளார்.
உக்ரைனை ரஷ்யா எப்போது வேண்டும் என்றாலும் தாக்கலாம் என பல மேற்கு நாட்டு தலைவர்கள் எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரான், ரஷ்ய ஜனாதிபதி புதினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
US President Joe Biden agrees to meet with Russian President Vladimir Putin 'in principle' if an invasion hasn't happened: Jen Psaki, Press Secretary, The White House#Ukraine pic.twitter.com/4gD7W013D9
— ANI (@ANI) February 21, 2022
இதன் இறுதியில் ரஷ்யா பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருப்பதாகவும், உக்ரைன் பிரச்சனையை ராஜதந்திர முறையில் தீர்வு காண விரும்புவதாகவும் தெரிவித்து இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகையில், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் உக்ரைன் பிரச்சனை தொடர்பான உச்சிமாநாட்டிற்கு சம்மதித்து இருப்பதாகவும், இந்த உச்சிமாநாட்டின் இறுதியில் அமைதிக்கான திட்டத்தை அனைவரும் சேர்ந்து தயார் செய்வார்கள் எனவும் தெரிவித்தார்.
இது குறித்து நேற்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்புத்துறை செயலர் ஜென் பிசகி வெளிட்டுள்ள அறிவிப்பில், ரஷ்யா உக்ரைனுக்குள் போர் தொடுக்காத கடைசி நிமிடம் வரை பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் மேலும் உக்ரைனுக்குள் நுழையக்கூடாது என்ற நிபந்தனையை ரஷ்யா கடைப்பிடித்தால், அமைதியை நிலைநாட்டுவதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திக்க தயாராக இருப்பதாகவும், இந்த சந்திப்பு எந்த வடிவத்தில் இருந்தாலும் அமெரிக்க ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வரும் வியாழக்கிழமை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் ஆகிய இருவரும் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.