US Election 2024: வெற்றியை நோக்கி நகரும் டிரம்ப்! செனட் அதிகாரத்தை கைப்பற்றும் குடியரசு கட்சி!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டு இருக்கும் நிலையில், குடியரசு கட்சியை வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார்.
டொனால்ட் டிரம்ப் முன்னிலை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், குடியரசு கட்சியை வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
50 மாகாணங்களில் உள்ள 538 இடங்களில் 270 இடங்கள் என்ற பெரும்பான்மையை பெற்றால் வெற்றி என்ற நிலையில், குடியரசு கட்சியை வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 266 இடங்களில் முன்னிலை மற்றும் வெற்றியை பதிவு செய்து வருகிறார்.
ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் 194 இடங்களிலும் முன்னிலை மற்றும் வெற்றியை பதிவு செய்து வருகிறார்.
செனட் தேர்தல் முடிவுகள்
செனட் தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை 100 செனட் இடங்களில் 51 இடங்கள் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையாகும்.
இந்நிலையில் 51 செனட் இடங்களை பெற்று 4 ஆண்டுகளுக்கு பிறகு செனட்டின் அதிகாரத்தை குடியரசு கட்சி கைப்பற்றியுள்ளது.
8 இடங்களில் இன்னும் முடிவுகள் வெளிவராத நிலையில், 40 இடங்களில் ஜனநாயக கட்சியினரும், 1 இடத்தில் மாற்று கட்சியினரும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஹவுஸ் முடிவுகளை பொறுத்தவரை குடியரசு கட்சி 195 இடங்களை பிடித்துள்ளது, ஜனநாயக கட்சி 167 இடங்களை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |