அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: முன்னிலை பெறும் டொனால்ட் டிரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
ஒட்டுமொத்த உலக நாடுகளும் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் 47 வது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், தற்போதைய நிலவரப்படி குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 538 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், அதில் பெரும்பான்மையாக 270க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை பெறும் வேட்பாளர் அமெரிக்காவின் அடுத்த புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.
டிரம்ப் முன்னிலை
இதுவரை வெளியாகியுள்ள முன்னிலை நிலவரங்கள் படி, குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் 195 இடங்களில் முன்னிலையும், ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ் 91 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளார்.
வாக்குகளை பொறுத்தவரை கமலா ஹாரிஸ் 37,8110,918 வாக்குகளுடன் இதுவரை 46.1% வாக்குகளை பெற்றுள்ளார்.
#USElection2024 | Voters choose between #DonaldTrump and #KamalaHarris in a crucial election, with outcomes impacting U.S. policies and global relations. Results hinge on key swing states.
— Hindustan Times (@htTweets) November 5, 2024
Read more here: https://t.co/n2R86X3O1T
(Reports @prashantktm) pic.twitter.com/JHlysl1SkW
டொனால்ட் டிரம்ப் 43,104,182 வாக்குகளுடன் 52.5% வாக்குகளை பெற்றுள்ளார்.
அத்துடன் 9 இடங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று இருப்பதாகவும், 4 இடங்களில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |